ஷார்ஜாவில் முதல் வெற்றி: 13 ரன்களில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா
ஷார்ஜா:
ஷார்ஜாவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடரில்இந்தியா தனது முதல் வெற்றியைப் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில்ஜிம்பாப்வேயைத் தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் முதல் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் இந்தியாஇரண்டாம் இடத்தில் உள்ளது. இரு வெற்றிகளுடன் இலங்கை முதலிடத்திலும், இருஆட்டங்களில் தோல்வி கண்ட ஜிம்பாப்வே கடைசி இடத்திலும் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே டாஸ் வென்றது. ஆனால்,முதலில் பேட் செய்யும்படி இந்தியாவைக் கேட்டுக் கொண்டது.
வழக்கத்துக்கு மாறாக டெண்டுல்கரும், திராவிடும் தொடக்க ஆட்டக்காரர்களாகக்களமிறங்கினர். இருவரும் நிதானமாகவே ஆடினர். இருப்பினும் 8 ரன்கள் எடுத்தநிலையில், டெண்டுல்கர் அவுட்டானார்.
ஒரு முனையில் திராவிட் நின்று ஆட மற்றொரு முனையில் வீரர்கள் அவுட்டாகிபெவிலியின் திரும்பிக் கொண்டிருந்தனர். இந் நிலையில், யுவராஜ் சிங் வந்து ஓரளவுநின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து வந்த தாஹியா, ராபின் சிங்,ஜோஷி ஆகியோரும் ஓரளவு நின்று ஆடி ரன்கள் குவித்தனர்.
இதனால், இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுக்க முடிந்தது.தொடக்கத்தில் இந்திய வீரர்கள் விளையாடியதைப் பார்த்தபோது இந்தியா 200ரன்களைத் தாண்டுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
ஆனால், கடைநிலை ஆட்டக்காரர்கள் சிறப்பாக கடைசி 10 ஓவர்களில் 80 ரன்களுக்குமேல் குவித்தனர். இந்திய அணியில் திராவிட் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே அணியில் ஃபிரென்டு சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
அடுத்து ஜிம்பாப்வே தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கத்திலேயே அதற்குசரிவு ஏற்பட்டது. ஜிம்பாப்வே அணியின் முதல் இரு விக்கெட்டுகளை ஜாகீர்கான்வீழ்த்தினார்.
இதனால், 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது ஜிம்பாப்வே தவித்தது. ஆனால்,அடுத்து ஜோடி சேர்ந்த கார்லிஸ்லி, ஆன்டி பிளவர் இருவரும் பதற்றப்படாமல்நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.
இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தனர். இருவரும் விளையாடியைப்பார்த்தபோது ஜிம்பாப்வே நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றியது.
இந் நிலையில் டெண்டுல்கர் வீசிய பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு சுனில் ஜோஷியிடம்பிடிபட்டு கார்லிஸ்லி அவுட்டானார். அவர் 60 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஆன்டி பிளவரும் 63 ரன்னில் அவுட்டானார். அவர்களுக்குஅடுத்து வந்த யாரும் அடித்து ஆடி ரன்கள் குவிக்க முடியவில்லை. இருப்பினும்ஜிரான்ட் பிளவரும், விட்டல் இருவரும் ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர்.
ஆனாலும், ஜிம்பாப்வேயால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில்ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களையே எடுத்தது.
இதனால் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளைவீழ்த்திய இந்திய வீரர் ஜாகீர் கான் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாவது சுற்று ஆட்டங்கள் 25-ம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில்ஜிம்பாப்வேயும், இலங்கையும் மோதுகின்றன. 3 அணிகளுக்கும் இன்னும் தலா இருஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications