உலகளாவிய முஸ்லிம் ராணுவம் ..பாக். தீவிரவாத தலைவர் கூறுகிறார்
கராச்சி:
உலகளாவிய அளவில் முஸ்லிம் ராணுவத்தை ஏற்படுத்த முன் வரவேண்டும் என்றுபாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தாய்பா என்ற தீவிரவாத இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்த அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் மொகம்மது சயீத், கராச்சியில் நடைபெற்றஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
கராச்சியில் சில நாட்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் லஷ்கர்-இ-தாய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 30 பேருக்கு மேல்காயமடைந்தனர்.
இச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை எதிர்த்து முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் ஒன்றுசேர்ந்து உலகளாவிய அளவில்முஸ்லிம் ராணுவத்தை உருவாக்கவேண்டும். இது தவிர, தங்களுக்கென தனி ஐக்கியநாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றையும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும், முஸ்லிம் நாடுகள் தங்களுக்கிடையே பொதுவான கரன்சி முறையை கொண்டுவரவேண்டும். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு வந்துள்ள யூரோகரன்சியும், அமெரிக்க டாலரும் மதிப்பு அதிகமாக உள்ளபோது முஸ்லிம் நாடுகளும்அத்தகைய பொதுவான கரன்சியை உருவாக்கவேண்டும்.
கராச்சியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இந்திய பாதுகாப்புப் படையினர்தான் காரணம்.இதற்கு லஷ்கர் -இ-தாய்பா அமைப்பு நிச்சயம் பதிலடி கொடுக்கும்.
இந்துக்களும், ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.ஆகவே, அவர்களுக்கு எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல இஸ்ரேலுக்குச்சென்றும் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்றார் ஹஃபீஸ் மொகம்மதுசயீத்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications