தமிழ் நாடகத்திற்கு சிங்கப்பூரில் தடை

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

இந்தியப் பெண்ணுக்கும், முஸ்லீம் ஆணுக்கும் இடையே நடக்கும் திருமணத்தால்ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அலசும் தமிழ் நாடகத்திற்கு சிங்கப்பூரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்தை எஸ்.தேன்மொழி என்பவரின் நாடகக் குழு தயாரித்துள்ளது.இதுவரை இரண்டு முறை அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு முறையும்ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால் சில முஸ்லீம் மற்றும் இந்தியர்கள்நாடகத்திற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

நாடகம் முஸ்லீம் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என்றும் இதை தடை செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நாடகத்திற்குஅனுமதி கொடுப்பது தொடர்பாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான அனுமதிவழங்கும் பிரிவு ஆராய்ந்து வந்தது. சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும்தேசிய கலைக் கவுன்சில் ஆகியவற்றின் கருத்துக்களைப் பெற்றது. இதன்அடிப்படையில் நாடகத்தை அரங்கேற்ற ஒரு வார தடை விதித்துள்ளது.

தமிழ் நாடகமான இது, மலாய் மற்றும் ஆங்கில மொழியிலும் அரங்கேற்றம்செய்யப்பட இருந்தது. தற்போதைய தடையால் இரு மொழிகளிலும் நாடகம்போடப்படுவது ரத்தாகியுள்ளது. இருப்பினும் தனிப்பட்ட ஷோக்கள் நடத்த அரசுஅனுமதி தரும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம்உருவாக்கப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டின் இறுதியில் இந்த நாடகம் முதல் முறையாகமேடையேற்றப்பட்டது.

நாடகத்தில், மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் உறவு கொள்ள கணவன்முயல்வதாகவும், மேலும் பல திருமணக் கொடுமைகள் அந்தப் பெண்ணுக்குநடப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்தியா உலமா ஜமாத் குழுவைச் சேர்ந்த இப்ராகிம் கூறுகையில்,இஸ்லாமிய சட்டத்தில், திருமணமான பெண்ணிடம் உறவு கொள்ள அந்தப்பெண்ணின் கணவனுக்குத் தடை இல்லை. அந்தப் பெண் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவளிடம் அவன் உறவு கொள்ள முழு உரிமை உள்ளது என்றார்.

நாடகத்தை தயாரித்துள்ள நாடகக் குழுவின் தலைவரான தேன்மொழி கூறுகையில்,இந்த நாடகம் பெண்களுக்கு சமுதாயத்தில் இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியது.குறிப்பிட்ட சமுதாயத்தை குறைத்துக் கூறுவதற்காக இது தயாரிக்கப்படவில்லை.அனைத்து சமுதாய பெண்களையும் இந்த நாடகம் கவர்ந்துள்ளது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+