அனிருத்தா ரத்வத்தேயிடம் மீண்டும் பாதுகாப்புத் துறை
கொழும்பு:
இலங்கை பாதுகாப்பு துறை துணை அமைச்சராக அனிருத்தா ரத்வத்தேநியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் சந்திரிகா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த ஆட்சியிலும்ரத்வத்தே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அக்டோபர் 19-ம் தேதிபதவியேற்ற புதிய அமைச்சரவையில், அவருக்கு மின்சாரம் மற்றும் சக்தித் துறைஅளிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையை அதிபர் சந்திரிகாவே வைத்திருந்தார்.
இந்த நிலையில் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக ரத்வத்தேநியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறையை கவனித்துக் கொள்வதில் தனக்குஉதவுவதற்காக ரத்வத்தேயை அப்பொறுப்பில் அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பந்தாரவலே என்ற இடத்தில் 26 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையை மட்டுமல்லாது உலகையே உலுக்கியுள்ளது. இந்தநிலையில் பாதுகாப்புத் துறையை கவனித்துக் கொள்வது கடினம் என்பதை உணர்ந்துஅதிபர் சந்திரிகா, ரத்வத்தேயிடம் துறையை விட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதிபர் சந்திரிகாவின் மிக நெருங்கிய நபர் ரத்வத்தே என்பது குறிப்பிடத்தக்கது. புதியபொறுப்பை ரத்வத்தே, வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே, பந்தாரவலேயில் நடந்த படுகொலைச் சம்பவம் குறித்து விரிவானவிசாரணை நடத்துமாறுபோலீஸ் ஐ.ஜி., ராணுவ கமாண்டர் மற்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு அதிபர் சந்திரிகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதுகுறித்தும் இந்த விசாரணையில் ஆராயப்படும். சம்பவம் நடந்த அன்று பணியில்இருந்த ராணுவ கமாண்டர் அஜித் அபயரத்னா ஏற்கனவே சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக 300 கிராமவாசிகளிடம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தாரவலே கிராமத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில், புகுந்த 3000-க்கும் மேற்பட்டகிராமவாசிகள் அங்கிருந்த 42 முன்னாள் விடுதலைப் புலிகள் மற்றும் அரசியல்கைதிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவமும்உதவியதாகக் கூறப்பட்டது. இதில் 26 தமிழர்கள் உயிரிழந்தனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications