தென் மாவட்டங்களுக்குக் கிளம்பினார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென் மாவட்டங்களில் 8 நாள் சுற்றுப் பயணம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து மதுரைகிளம்பினார்.

சென்னையில் இருந்து சனி மாலை 5 மணிக்குக் கார் மூலம் கிளம்பிய அவர் இரவு 10மணியளவில் மதுரை சென்றடைகிறார். அங்கே அவருக்கு அதிமுகவினர் உற்சாகவரவேற்பு அளிக்கின்றனர்.

மதுரை அசோகா ஹோட்டலில் தங்கும் அவர் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுக்கிறார்.

திங்கள்கிழமை கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்குச் சென்று தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.

31-ம் தேதி கோவில்பட்டி சென்று 5,200 பேருக்கு இலவச ஆயுள் காப்பீட்டுப்பத்திரங்களை வழங்குகிறார்.

நவம்பர் 1ம் தேதி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் விவசாயிகளுக்குதென்னங்கன்றுகளை வழங்குகிறார்.

2-ம் தேதி பரமக்குடியில் 5 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில்பேசுகிறார்.

3-ம் தேதி மதுரையில் இலவச சட்ட ஆலோசனை முகாமை தொடங்கி வைக்கிறார்.

4-ம் தேதி திண்டுக்கல்லில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதிஎம்ஜிஆர் சிலை திறப்பு விழா மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவிகள் வழங்கும்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தென் மாவட்டங்களில் 8 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நவம்பர் 6-ம்தேதி சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+