For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜா கிரிக்கெட்: கோப்பை யாருக்கு?

By Staff
Google Oneindia Tamil News

ஷார்ஜா:

ஷார்ஜா கோப்பைக்கான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில்இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன.

தான் விளையாடிய அனைத்து (4) ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிஆட்டத்துக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஜிம்பாப்வேயை இருஆட்டங்களில் தோற்கடித்ததன் மூலம் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது.

இப் போட்டித் தொடரில் மூன்றாவது அணியாகக் கலந்து கொண்ட ஜிம்பாப்வேஅனைத்து ஆட்டங்களிலும் தோல்வியுற்றது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் மூன்று அம்சங்களிலும் இலங்கைசிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் அவுட்டானாலும், அடுத்து மத்திய நிலை ஆட்டக்காரர்கள்நின்று ஆடி இலங்கைக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர்.

பந்துவீச்சிலும் இதே நிலைதான். ஒரு பவுலர் தவறும்பட்சத்தில் மற்றவர்கள் சிறப்பாகப்பந்துவீசி எதிரணியினரை அவுட்டாக்குவதிலும் சரி, ரன் குவிக்க விடாமல்தடுப்பதிலும் சரி திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது பணியை சிறப்பாகச்செய்து வருகிறார். இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அவர் 30ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள்என்ற இச் சாதனையை அவர் புரிந்துள்ளார்.

பேட்டிங், பவுலிங் என்ற இரண்டிலும் முத்திரையைப் பதித்த இலங்கை வீரர்கள் அந்தஇரண்டையும் விட மிகச் சிறந்த பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியாவை விடவலுவானதாக இலங்கை திகழ்கிறது.

லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் தோற்றுகோப்பையை இழந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியில் தகுதிச் சுற்று ஆட்டங்கள்அனைத்திலும் வென்ற இந்தியா இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்றுகோப்பையைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் லீக் ஆட்டங்களில் தோற்று அதிர்ஷ்டவசமாக இறுதி ஆட்டத்துக்குத்தகுதி பெற்ற அணி, கோப்பையை வென்ற சம்பவங்களும் பல நடந்துள்ளன.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை வெற்றிபெறுமா என்பதை அன்று நடைபெறும் ஆட்டத்தைப் பொறுத்துத்தான் முடிவாகும்.

ஒரு நாள் போட்டியில் ஆட்டம் நடைபெறும் அன்று எந்த அணி எதிர் அணியைஅணியை விட வலுவானதாக இருக்கிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என்பதுநிரூபிக்கப்பட்ட ஒன்று.

உலக சாம்பியனாக திகழ்ந்த அணி மிகவும் சாதாரண அணியிடம் தோல்வியுற்றசம்பவங்களும் பல நடந்ததுண்டு என்பதே இதற்குச் சான்று.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்புஇருக்கிறதா என்பதை ஆராயும்போது அந்த அணியை எதிர்த்து விளையாட உள்ளஇந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.

இலங்கைக்கு எதிரான இரு லீக் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வியையே தழுவியது.இந்திய அணியில் 5-வது பந்துவீச்சாளர் இல்லை என்ற குறைபாடு நன்றாகவேதெரிகிறது.

பேட்டிங்கிலும், முதல் நிலை வீரர்கள் அவுட்டாகிவிட்டால் பின் கள ஆட்டக்காரர்கள்நின்று ஆடி ரன் குவிக்கத் தவறிவிடுகின்றனர். இந்தியாவுக்கு நீண்ட காலமாக உள்ளஇந்த குறை இன்னும் சரி செய்யப்படவில்லை.

மெதுவாக ஆடினாலும், ஓரளவு விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டு ரன்களைஎடுக்கும் ராகுல் திராவிட் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட தமிழகத்தின் ஸ்ரீராம் தனது திறமையை நிரூபிக்கத்தவறிவிட்டார்.

இரு ஆட்டங்களிலும் அவர் மொத்தம் 6 ரன்களே எடுத்துள்ளார். மற்றொரு இடது கைஆட்டக்காரராக காம்ளியும் இதே நிலையில்தான் உள்ளார்.

பலமுறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஒரு முறை கூட அவர் அந்தவாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு பேட்டிங் வலு சேர்க்கத் தவறிவிட்டார்.

பந்துவீச் எடுத்துக் கொண்டால் இன்னும் கும்ளேதான் இந்தியாவின் ஒரே ஆயுதம்என்ற நிலை நீடிக்கிறது. உடல் நிலை பாதிப்பு காரணமாக இலங்கைக்கு எதிரானகடைசி லீக் ஆட்டத்தில் விளையாடாத கும்ளே, இறுதி ஆட்டத்திலும் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக அந்த ஒரே ஆயுதம் பழுதுபட்டுவிட்டது. மற்றபடி வெங்கடேஷ் பிரசாத் இறுதிஆட்டத்தில் விளையாடுகிறார். அவருக்குப் பக்க பலமாக அகார்கர், ஸாகீர் கான்ஆகியோர் உள்ளனர்.

புதிய வரவான ஸாகீர் கான் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். ஜிம்பாப்வே அணிக்குஎதிராக அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், 10 ஓவர்கள் முழுமையாக வீசக் கூடிய அளவில் 5-வது பந்துவீச்சாளர்இந்திய அணியில் யாரும் இல்லை. இலங்கைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில்கேப்டன் கங்குலி உள்பட 7 பேர் பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மோசமாக உள்ள இந்தியா, பீல்டிங்கில்படுமோசமாகவே உள்ளது எனலாம்.

ஆக இலங்கையை விட பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 அம்சங்களிலும் இந்தியாபின்தங்கியே உள்ளது. அதனால், இலங்கைக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாகஉள்ளது.

இருப்பினும், இறுதி ஆட்டம் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா சிறப்பாகஆடும் பட்சத்தில் இலங்கையைத் தோற்கடித்து கோப்பையை வெல்லமுடியும்.

ஆக, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாகவும்விறுவிறுப்பாகவும் இருக்கும் எனலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X