ராஜ்குமார்: தூதுக்குழு 30-ம் தேதி காடு செல்லுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பேச்சு நடத்த 30ம் தேதி தூதுக்குழு காட்டுக்குள் செல்லலாம் எனத்தெரிகிறது.

கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனால் கடத்தப்பட்டு மூன்று மாதமாகப் போகும்சூழ்நிலையில், அவரை வீரப்பனிடம் இருந்து மீட்பதற்காக 6வது முறையாக தூதுக்குழு அனுப்புவது பற்றிதமிழகம் - கர்நாடக மாநில அரசுகள் விவாதித்து வருகின்றன.

அநேகமாக 30ம் தேதி திங்கள் கிழமை தூதுக்குழுவினர் மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.கடந்த முறை சென்ற நெடுமாறன் - கோபால் தலைமையிலான அதே குழுவினர் மீண்டும் செல்வதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன. அதற்குள் வீரப்பனிடம் இருந்து அழைப்பு வந்து விடும் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் தூதுக்குழுவினர்.

இதுபற்றி நக்கீரன் பத்திரிகை அலுவலகம் தெரிவித்த தகவல்கள் இதுதான்:

வீரப்பனிடம் இருந்து தகவலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த நேரம் தகவல் வரக் கூடும். தகவல்வந்ததும் எங்கள் ஆசிரியர் கோபாலும், தூதுக்குழுவினரும் உடனடியாக காட்டுக்கு புறப்படத் தயாராகஇருக்கின்றனர்.

இந்த முறை எங்களின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும். ராஜ்குமார் நலமுடன் திரும்புவார் என்றுநக்கீரன் அலுவலகம் தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+