காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை
கரூர்:
காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கைஎடுக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை தமிழ்நாடு வெள்ளாளர்கூட்டமைப்பின் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
கூட்டமைப்பின் இளைஞர் பிரிவின் முதல் மாநில மாநாடு கரூரில் சனிக்கிழமைநடைபெற்றது. இக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறதீர்மானங்கள் விவரம்:
காவிரி நதி நீர்ப் பிரச்சினையை வறட்சியின்போதுதான் மாநில அரசுகளும், மத்தியஅரசுகளும் கையில் எடுத்துக் கொள்கின்றன. இப் பிரச்சினையின் தீவிரத் தன்மையைக்கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வு காண அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இயற்கைச் சீற்றங்களில் இருந்து விவசாயிகளைக் காக்க பயிர் காப்பீட்டுத் திட்டத்தைதமிழக அரசு உடனடியாக அமல்படுத்தவேண்டும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் கரூர், திருச்சி மாவட்டங்களைச்சேர்ந்த வெற்றிலை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இன்னும்நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
நஷ்டமடைந்த வெற்றிலை விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நஷ்ட ஈடுவழங்கவேண்டும். 8 சதவீதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000என விலை நிர்ணயம் செய்யவேண்டும்.
பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள வெள்ளாள சமுதாயத்தினருக்கு என தனி நலவாரியம் அமைக்கவேண்டும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications