ஏலத்துக்கு வரும் கலைமகள் சபா கட்டடங்கள்
ஈரோடு:
கலைமகள் சபாவுக்குச் சொந்தமான கட்டடங்கள் விரைவில் ஏலம் விடப்படும் எனஇந்த சொத்துக்களை நிர்வகிக்கும் தனி அதிகாரி மகதும்ஷா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கலைமகள்சபா என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இந் நிறுவனத்தின் நிர்வாகிகள்பொதுமக்களிடம் பெருமளவு நிதி வசூல் செய்து பல இடங்களில் முதலீடு செய்தனர்.
பரிசுப் பொருட்கள், இனாம் மற்றும் கல்வி, திருமணம் ஆகியவற்றிற்கு நிதி உதவிஅளிப்பதாக பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தனர். ஆனால் சில நாட்களில் பலகோடி ரூபாய் ரொக்கத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. கலைமகள் சபா மீது உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சொத்துக்களை ஏலம் விட்டு பணம் செலுத்திய அனைவருக்கும் பிரித்துக்கொடுக்க அரசு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு தனி அதிகாரியாகமகதும்ஷா நியமிக்கப்பட்டார். இணை இயக்குநர்களாக நவநீதகிருஷ்ணன் மற்றும்சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தற்போது கலைமகள் சபாவின் சொத்துக்களை ஏலம் விட்டு பணத்தைமீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக வாகனங்கள் ஏலம்விடப்பட்டன.
இந்த ஏலத்தின் மூலம் 32.42 லட்ச ரூபாய் கிடைத்தது. டி.வி பெட்டிகள் மற்றும்ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலம் 18.41 லட்ச ரூபாய் கிடைத்தது. பிற சொத்துக்களும்அவ்வப்போது ஏலம் விடப்பட்டன. இதுவரை மொத்தம் 8.5 கோடி ரூபாய் கிடைத்தது.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக டில்லி, மும்பை, திருச்சூர், சென்னை, மதுரைபோன்ற இடங்களில் உள்ள கட்டடங்கள் ஏலம் விடப்படுகின்றன. கலைமகள் சபாவில்5 லட்சத்து 39 ஆயிரத்து 229 பேர், 119.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இந்தப் பணத்தை திரட்ட தற்போது கலைமகள் சபாவிற்குச் சொந்தமான கட்டடங்கள்ஏலம் விடப்படுகிறது என்று மகதுமஷா தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications