ஜெ. இன்னும் திருந்தவில்லை - வாழப்பாடி
சென்னை:
சென்னையில் சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசிய பேச்சு அவர் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறதுஎன்று வாழப்பாடி ராமமூர்த்தி சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கஜானாவைக் காலி செய்து தற்போது தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அவரதுபொதுக்குழுப் பேச்சு ஆணவத்தின் சாயல்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியை சிறையில் தள்ளுவேன் என்று ஜெயலலிதா பொதுக்குழுவில் பேசியுள்ளார். இது அவரதுசர்வாதிகாரத்தையே காட்டுகிறது.
மத்தியில் புதிய ஆட்சி ஏற்படுவதற்கு அஇஅதிமுக உதவி செய்யும் என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து அவர் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலானஆட்சியைக் கவிழ்க்க மீண்டும் திட்டமிடுகிறார் என்று தெரிகிறது.
5 ஆண்டுகளுக்கு நாட்டில் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு மக்கள் தீர்ப்பைமதிப்பதாகத் தெரியவில்லை.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஜெயலலிதா சித்தம் கலங்கி, நிலைகுலைந்து போயிருக்கிறார்என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது.
கடந்த காலத்தில் ஜெயலலிதா செய்த தவறுகளை நினைத்துப் பார்த்துத் திருந்துவதாகத் தெரியவில்லை. மேலும், மேலும் தொடர்ந்து தவறுகளை செய்துவருகிறார். அவரது பேச்சுக்கள் அழிவு காலத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இனிமேல் அவரையாரும் காப்பாற்ற முடியாது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications