புதிய ஆயுதத் தொழிற்சாலை கட்ட பாகிஸ்தான் முடிவு
இஸ்லாமாபாத்:
புதிய ஆயுதத் தொழிற்சாலையைக் கட்ட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் வட மேற்கு ஃபிரன்டியர் மாகாணத்தில் உள்ள தர்ரா ஆடம் கேல் என்ற நகரில்இந்த ஆயுதத் தொழிற்சாலை கட்டப்படவுள்ளது.
அம் மாகாணத்தைச் சேர்ந்த திறமையுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புஅளிக்கும் வகையில் இந்த ஆயுதத் தொழிற்சாலை அங்கு அமைக்கப்படவுள்ளதுஎன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்ரா ஆடம் கேல் என்ற நகரில் பல நூற்றாண்டுகளாக பழங்குடியின மக்கள்தான்அனைத்து விதமான ஆயுதங்களையும் தயாரிக்கு வருகின்றனர்.
இந் நிலையில், அங்கு ஆயுத உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆயுதத்தொழிற்சாலையை கட்ட அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உள்ளூர் ஆயுத உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சு வார்த்தைநடத்தியுள்ளது. அரசே ஆயுத உற்பத்தி செய்தாலும், பழங்குடியினர் தொடர்ந்துஆயுதம் தயாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications