வைகோ - பாலசிங்கம் சந்திப்பு: த.மா.கா. கண்டனம்
சென்னை:
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தை, மதிமுக தலைவர் வைகோ சந்தித்தது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க் கிழமை நிருபர்களிடம்பேசுகையில், புத்தாயிரம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக இந்திராகாந்தியை பி.பி.சி நிறுவனம் தேர்வு செய்து இருக்கிறது.
இதையொட்டி இந்திரா காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட சோனியாகாந்திக்கு த.மா.கா தலைவர் மூப்பனார் கடந்த பத்து நாட்களுக்குமுன்பு கடிதம் எழுதினார். சோனியாகாந்தி அதை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து இருக்கிறார்.
த.மா.கா சார்பிலும், இந்திராகாந்தி பிறந்தநாள் நவம்பர் 19-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும். சமீபத்தில் மூப்பனார் டெல்லி சென்று இந்தவிழா சம்பந்தமாக சோனியா காந்தியிடம் நேரிலும் பேசியிருக்கிறார் என்றனர்.
பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விக்கும் முன்னாள் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
கேள்வி: அகில இந்திய அளவில் மூன்றாவது அணி ஏற்படுமா?
பதில்: மூன்றாவது அணி இன்னும் வடிவம் எடுக்கவில்லை. வடிவம் எடுத்த பிறகு பார்க்கலாம்.
கேள்வி: தமிழ்நாட்டில் அ.தி.மு.க தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?
பதில்: சிதம்பரத்தில் நடந்த த.மா.கா செயற்குழுவில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அ.தி.மு.க தனித்துஆட்சி என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இரண்டு தீர்மானங்களும் அப்படியே இருக்கிறது. தேர்தல் வரும் பொழுது அது பற்றி முடிவு செய்யப்படும்.
கேள்வி: ஐ.நா கூட்டத்திற்கு சென்ற வைகோ அங்கு பாலசிங்கத்தை சந்தித்து இருக்கிறாரே?
பதில்: ஐ.நா தூதுக் குழுவில் சென்ற வைகோ விடுதலைப்புலிகளை சந்தித்தது பற்றி மத்தியஅரசு விளக்கம் அளிக்கவேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பதுதேச விரோத செயல். விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications