தேவையற்ற மில்கள் மூடப்படும்
கோவை:
தேசியப் பஞ்சாலைக் கழகத்திற்குச் சொந்தமான, நடத்தத் தகுதியற்ற மில்கள் விரைவில் மூடப்படும். அதே சமயம் நஷ்டத்தில் இயங்கும் மில்களை மறுசீரமைப்புச் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என பார்லிமென்டரி டெக்ஸ்டைல் சப் கமிட்டியின் சேர்மனும், கோவை எம்.பி.யுமான ராதாகிருஷ்ணன்கூறினார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக டெக்ஸ்டைல் சப் கமிட்டி ராஜஸ்தான், குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுற்றுப் பயணம் செய்தது. இந்த சப் கமிட்டி 11 நாட்கள்மேற்கொண்ட ஆய்வில் என்.டி.சி மில்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் பின்னர் கமிட்டி விவாதம் மேற்கொண்டது. இந்த விவாதத்தில், மேற்கொண்டு நடத்த இயலாத தேசிய பஞ்சாலைக் கழகத்திற்குச் சொந்தமானமில்கள் மூடப்படும்.
இந்தியாவில் உள்ள தேசியப் பஞ்சாலைக் கழகத்திற்குச் சொந்தமான 114 பஞ்சாலைகளில் 80 சதவீதம் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்தபஞ்சாலைகளை மறு சீரமைக்கவும், நவீனமயமாக்கவும் மத்திய அரசு நிதியுதவி செய்யவுள்ளது.
மூடப்படும் நிலையில் உள்ள மில்களின் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் தானாக முன் வந்து ஓய்வு பெரும் திட்டத்தின் கீழ்நிதியுதவி அளிக்கப்படும்.
இந்த வகை மில்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், பழைய இயந்திரங்களையே கொண்டு செயல்பட்டு வருகின்றன. காலச் சூழ்நிலைக் கேற்ற நவீனஇயந்திரங்களை புகுத்த இந்த மில்கள் தவறி விட்டன.
அடுத்து நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக இந்த மில்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த மில்கள் ஒரு முறை கூடலாபத்தில் இயங்கியதில்லை. போதுமான உற்பத்தி திறனும் பெற்றிருக்கவில்லை.
எனவே, அடுத்து வரும் சர்வதேசப் போட்டியைச் சமாளிக்க இந்த மில்களால் இயலாது. தரமான பொருட்களையும் பழமை வாய்ந்த இயந்திரங்களைக்கொண்டு தயாரிக்க இயலாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications