இறந்த கைதியின் பெற்றோருக்கு இழப்பீடு
சென்னை:
போலீஸ் காவலில் இறந்த ஆட்டோ மெக்கானிக்கின் பெற்றோருக்கு ரூ. 1 லட்சம்இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1993-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் கணக்கிட்டு, எட்டு சதவீதவட்டியுடன் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழகஉள்துறை செயலாளருக்கு, நீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் காவலில் இறந்த நடராஜன் என்ற ஆட்டோ மெக்கானிக்கின்பெற்றோர் செல்லம்மாள் மற்றும் கன்னியப்பன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த ரிட் மனுவில், தங்களது மகன் சாவுக்குக் காரணமானவர்களிடமிருந்துமுறையான இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி சென்னை அரும்பாக்கம் போலீஸ்நிலையத்திற்கு நடராஜன் அழைத்து செல்லப்பட்டார். திருட்டு வழக்கில் அவர் மீதுகுற்றம் சாட்டப்பட்டு மத்திய சிறையில், ரிமான்ட் செய்யப்பட்டார். அக்டோபர் 1-ம்தேதி நடராஜன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைஅதிகாரிகளிடமிருந்து நடராஜனின் பெற்றோருக்கு தந்தி வந்தது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர். அப்போதுநடராஜனின் உடலில் காயங்கள் இருந்தன. தன்னை சிறையில் அடித்ததாகநடராஜுனும், தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
பின்னர் நடராஜன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் மீண்டும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6-ம் தேதி இறந்தார்.
தங்களது மகன் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதற்குக்காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடராஜனின்பெற்றோர் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.இருப்பினும், நடராஜன் கொடுமைப்படுத்தப்பட்டதாக போதுமான ஆதாரங்கள்இல்லாததால், அவர்களுக்கு எந்தத் தண்டனையும் தரவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications