இலங்கையில் வன்முறை .. 4 பேர் பலி
கொழும்பு:
மத்திய இலங்கையில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் இறந்தனர். பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
மத்திய இலங்கையின் படுல்லா மாவட்டத்தில் பண்டாரவளே நகரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 29 தமிழர்கள் சமீபத்தில்படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கையிந் பல இடங்களில் தமிழர், சிங்களர்களுக்கிடையே கலவரம் மூண்டுள்ளது. மறுவாழ்வு முகாமில் இறந்தஒருவரது உடல் அவரது சொந்த ஊரான நுவரேலியாவில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலம் நடந்த போது நுவரேலியாவில் கலவரம் நடந்தது. பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. தற்போது, அங்குபோலீஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தின் பிடியில் நுவரேலியா:
இனக்கலவரத்தையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இலங்கைப் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயகே அவசரக் கூட்டத்தைக்கூட்டி ஆலோசித்தார்.
நுவரேலியாவில் இனக்கலவரம் நடப்பதையறிந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் உள்பட அரசியல் தலைவர்கள்பலர், விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர்.
அங்கு அமைதி ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கு நிலையை பாதுகாக்கவும் அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் மறுவாழ்வுமுகாமில் புலிகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், அதுகுறித்து விசாரணை நடத்தவும் அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
அன்னான் கண்டனம்:
இதற்கிடையே, மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 29 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கோபிஅன்னான் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கு அமைதியை உருவாக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கைது:
ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யாக உள்ளவர் சந்திரசேகரன். கடந்த ஆண்டு வரை சந்திரிகா அமைச்சரவையில் துணையமைச்சராக இருந்தார். இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவின் தலைவராக இருந்தார்.
கடந்த 99-ம் ஆண்டு இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். நாட்டு மக்கள் முன்னணி என்ற கட்சித் தலைவராகவும் உள்ளார். தமிழர்கள்படுகொலையைப் பயன்படுத்தி, பல இடங்களில் கலவரங்களை தூண்டிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பல இடங்களில் இனக்கலவரங்கள் வெடித்தன.
கலவர கும்பல், பஸ்களைத் தாக்கியது. ரயில்களுக்குத் தீ வைத்தது. இதையடுத்து சந்திரசேகரனைப் போலீஸார் கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications