தடா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு .. கர்நாடகம் மெளனம்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பை ஒத்திவைத்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க கர்நாடகம் மறுத்துவிட்டது.
கடந்த சில நாட்களாக நடந்து வந்த கர்நாடக சட்டமேலவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவுற்றது. நவம்பர்7-ம் தேதி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன் தடா கைதிகள் விடுதலைகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை பாஜக உறுப்பினர்கள் சபையில் எழுப்பினர்.
அதற்கு சட்ட அமைச்சர் டி.பி. சந்திரே கவுடா பதிலளித்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் 51 தடாகைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இது குறித்து என்னசொல்வது என்று தெரியவில்லை.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி கருத்து தெரிவித்தால் அது நீதிமன்றஅவமதிப்புக்குள்ளாகிவிடும். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில்தான் உள்ளது. ஆகவே, தீர்ப்பு வரும் வரை எந்தகருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இவ் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசின் நிலைமையை கர்நாடக அரசுவழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டனர். இப்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களையும், வழக்கறிஞர்கள்வாதிட்டதையும் தீர்ப்பின் ஒருபகுதியாகக் கருதக்கூடாது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாதுஎன்றார் சந்திரே கவுடா.
இதற்கிடையே, வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை சபையில்தெரிவிக்கவேண்டும் என்று பாஜக அவைத் தலைவர் டி.எச். சங்கரமூர்த்தியும், பி.எஸ். எடியூரப்பாவும் கோரினர்.
ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டு 93 நாள்கள் ஆகிவிட்டன. ஆகவே, கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைமற்று முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தானாக முன் வந்து அறிக்கை வெளியிடவேண்டும். மக்களும் அதுபற்றிதெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளனர் என்று அவர்கள் கேட்டுக் காண்டனர்.
கர்நாடக உதயமான நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால், கர்நாடகத்தின் தலைசிறந்த நடிகர்கடத்தல்காரனிடன் பிணைக் கைதியாக உள்ளார். ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
இந் நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறதுகர்நாடக அரசு. ராஜ்குமாரை மீட்க தூதர்கள் மீண்டும் அனுப்பப்படுவார்களா என்பதை கர்நாடக அரசுதெரிவிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே, தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளநிலையில், அது பற்றி சட்ட மேலவையில் விவாதிப்பது சரியல்ல. விவாதத்தின்போது இரு மாநில அரசுகளையும்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது என்பது உண்மைதான். ஆனால், தீர்ப்பு வேறு விதமாகவும் இருக்கலாம் என்றுஐக்கிய ஜனதா தள உறுப்பினர் எம்.பி. பிரகாஷ், ஜனதா தள உறுப்பினர் பி.எல். சங்கர் இருவரும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications