ஏ.சி. இயந்திரம், கலர் டிவி தயாரிப்பில் இறங்குகிறது டி-சீரீஸ்
டெல்லி:
டி-சீரீஸ் என்ற பெயரில் ஆடியோ கேசட்டுகளைத் தயாரித்து விற்கும் சூப்பர் கேசட்ஸ்இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) மற்றும் கலர் டிவிக்களைத்தயாரிக்க முடிவு செய்துள்ளது.
சுமார் ரூ. 350 கோடி மதிப்புள்ள சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சி-சீரீஸ்கேசட்டுகள் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்றன. இந் நிறுவனத்தின்உரிமையாளர் குல்ஷன் குமார், மும்பை மாஃபியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.எம்.வி. போன்ற கேசட்டுகள் அமோகமாக விற்பனை ஆன காலத்தில் டி-சீரீஸ்கேசட்டுகளை தைரியமாக அறிமுகப்படுத்தியவர் குல்ஷன் குமார். இப்போதுஇந்தியாவில் அதிகம் விற்பனை ஆவது டி-சீரீஸ் கேசட்டுகள்தான்.
கேசட் தயாரிப்பு தவிர அடுத்த நிதி ஆண்டு முதல் குளிர்சாதனப் பெட்டிகளைத்தயாரிக்கவும் சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது தவிர,சீனாவைச் சேர்ந்த சிசுவான் சாங்ஹோங எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்துஇந்தியாவில் கலர் டிவி தயாரிப்பிலும் ஈடுபட அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டிவி தயாரிப்பது தொடர்பாக சீனா நிறுவனத்துடனும், குளிர்சாதனப் பெட்டிகள்தயாரிப்பது தொடர்பாக பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டுவருவதாக சூப்பர் கேசட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
குளிர்சாதனப் பெட்டிகள் அடுத்து நிதி ஆண்டிலிருந்து தயாரிக்கப்படும். ஆனால், கலர்டிவிக்கள் நடப்பு ஆண்டின் இறுதியிலிருந்தே தயாரிக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications