முறையாக விடுதலையாக விரும்புகிறோம் .. வீரப்பனுக்கு தடா கைதிகள் கடிதம்
பெங்களூர்:
வீரப்பன் நிபந்தனைக்காக தங்களுக்கு விடுதலை கிடைப்பதை தமிழக, கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தடா கைதிகள் விரும்பவில்லை.மேலும் நீதி விசாரணைக்குப் பிறகு முறையாக விடுதலை கிடைத்தால் போதும் என்று அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தமிழக, கர்நாடக சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால், வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்ததையடுத்து, தடா கைதிகள் விடுவிப்பில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே வீரப்பன் கோரிக்கைப்படி, விடுதலையை எதிர்பார்த்த கைதிகள், தற்போது ஏற்பட்டுள்ளசட்ட சிக்கல்களினால் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மைசூர் சிறையில் இருக்கும் 51 தடா கைதிகள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்குப் பின்னர், விடுதலை பெறுவதையே விரும்புகிறோம்.எந்த நிபந்தனைப்படியும் எங்களுக்கு விடுதலை வேண்டாம். எங்களுக்காக ராஜ்குமாரை காட்டில் சிறை வைக்க வேண்டாம் என்று வீரப்பனுக்குக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நேர்மையான முறையில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் வீரப்பன் தனது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று தடா கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கைதிகள் 51 பேரும் வீரப்பனுக்குத் தனித்தனியாகக் கடிதம்எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் நடிகர் ராஜ்குமார் விடுதலைக்கு மாற்றாக எங்களை விடுதலை செய்தால், இப்பிரச்சனை ஓய்ந்தபின் மீண்டும் சட்டம் எங்கள் மீது பாயாதுஎன்பதற்கு என்ன ஆதாரம்? அதனால் நேர்மையான முறையில் விடுதலையடைவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று தடா கைதிகள் அக்கடிதங்களில்குறிப்பிட்டுள்ளனர்.
இக்கடிதங்கள் தடா கைதிகளின் வக்கீல் வேணுகோபாலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் இவற்றை சென்னைக்கு அனுப்பியுள்ளார். அடுத்த முறைகாட்டுக்குச் செல்லும் கோபால் அல்லது பழ.நெடுமாறன் மூலமாக இக்கடிதங்கள் வீரப்பனிடம் கொடுக்கப்படும் என்றார் சாரா கோவிந்த்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications