சென்னை -கல்கத்தா ரயில் பாதை மின்மயமாகிறது
திருச்சி:
நாட்டில் உள்ள 62 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதையில் 24 சதவீதம் மட்டுமேமின்மயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரிய உறுப்பினர் என்.கே. சிதம்பரம்தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியா முழுவதும் மொத்தம் 62 ஆயிரம் கிலோமீட்டர் நீள ரயில் பாதை உள்ளது.ரயில் பாதை முழுவதையும் மின்மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு 500 கிலோமீட்டர் நீள ரயில் பாதை மட்டுமேமின்மயமாக்கப்பட்டு வருகிறது. இதுரை 24 சதவீதம் ரயில்பாதைதான்மின்மயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது கல்கத்தா-மும்பை, ஹெளரா-டெல்லி, டெல்லி-மும்பை, மும்பை-கல்கத்தா,சென்னை-கல்கத்தா ஆகிய முக்கிய ரயில்பாதைத் தடங்கள் மின்மயமாக்கப்பட்டுவருகின்றன. அடுத்த இரு ஆண்டுகளில் இப் பணி முடிந்துவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வேயை நவீனமாக்க ரயில்வே வாரியம் பல்வேற திட்டங்களைத் தீட்டியுள்ளது.அவற்றை நிறைவேற்ற மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ரயில்வேயில் சிக்னல்மற்றும் தொலைத் தொடர்பு முறையை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.400 கோடிசெலவிடப்பட்டு வருகிறது.
சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு முறை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அனலாக்மைக்ரோவ் முறைக்குப் பதிலாக டிஜிடல் மைக்ரோவ் முறை அமல்படுத்தப்பட்டுவருகிறது. விரைவில் இப் பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பணி முடிந்துள்ள பெங்களூர், மைசூர், திருச்சி, மதுரை பகுதிகள் ஏற்கெனவேசென்னையுடன் டிஜிடல் மைக்ரோவ் முறையில் இணைக்கப்பட்டுள்ளன என்றார்சிதம்பரம்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications