இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் பலி
ஜெருசேலம்:
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில்தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் இதுவரை 154 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில்பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனர்கள். தொடர்ந்து வரும் மோதலைத் தவிர்ப்பதற்காக, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஷிமோன் பெரஸ், அராபத்துடன்அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் எஹூத் பராக் கூறுகையில், புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கும், இஸ்ரேல்வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
பாலஸ்தீனர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இனிமேலும் அவர்களது தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இஸ்ரேல்ராணுவத்தின் வலிமை பாலஸ்தீனர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். இஸ்ரேல் வீரர்களையும், குடிமக்களையும் காப்பாற்ற மிகக் கடுமையானநடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.
கடந்த வாரம் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்துடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியையேத் தழுவியதுஎன்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications