மேட்ச் பிக்ஸிங்கில் அசாருக்குத் தொடர்பு - சிபிஐ அறிக்கையில் தகவல்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்குத்தொடர்பு இருப்பது சிபிஐயின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக மத்தியஅமைச்சர் தீன்ஷா தெரிவித்தார்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மத்திய அரசின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணைநடத்தியது. கடந்த 6 மாதமாக நடந்த விசாரணையின் முடிவில் சில நாட்களுக்கு முன்தனது விசாரணை அறிக்கைய மத்திய அமைச்சர் தீன்ஷாவிடம் சிபிஐ ஒப்படைத்தது.
முதலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில்போது நாடாளுமன்றதில்அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தீன்ஷா தெரிவித்தார். ஆனால், பிரதமர்வாஜ்பாயியைச் சந்தித்தபிறகு, இரண்டு நாளில் சிபிஐ அறிக்கை வெளியிடப்படும்என்றார் அவர்.
இந் நிலையில், சிபிஐயின் விசாரணை அறிக்கையில் மேட்ச் பிக்ஸிங்கில்அசாருதீனுக்குத் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதேநேரத்தில், மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்ட கபில் தேவ் மீது அக் குற்றம்நிரூபிக்கப்படவில்லை என்றார் அமைச்சர் தீன்ஷா.
மேற்கொண்ட தகவல் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், அறிக்கையவெளியிடப்பட்ட உடன் அனைத்து விஷயங்களும் வெளியாகும் என்றார்.
இதற்கிடையே சிபிஐயின் விசாரணை அறிக்கையில் அசாருதீன் தவிர அஜய் சர்மா,மனோஜ் பிரபாகர், நயான் மோங்கியா, அஜய் ஜடேஜா ஆகியோரது பெயரும், இந்தியஅணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்டாக இருந்த அலி இராணி ஆகியோரதுபெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தவிர ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ், டீன் ஜோன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள்அணியின் பிரையன் லாரா, பாகிஸ்தானின் சலீம் மாலிக், இங்கிலாந்தின் அலெக்ஸ்டீவர்ட் உள்பட 7 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களும் அந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்மேற்கண்ட 7 வெளிநாட்டு வீரர்களும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தெரியவந்ததுஎன்று சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் குறைந்தது ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அசாருதீன்தான் நிறையகிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நிறைய பணம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிபிஐ அறிக்கை வெளியானவுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவீரர்கள் மீது அவர்கள் செய்த தவறின் தன்மையின் அடிப்படையில் தண்டனைவழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications