ராகிங்: மாணவர்கள் கைது .. முதல்வர் மீது வழக்கு
கோவை:
கோவை அருகே உள்ள கல்லூரியில் ராகிங் செய்ததாக 6 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முதல்வர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில்வெளியே வந்தார்.
கோவை அருகே காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்குள்ள மாணவர்கள் சிலர் ராகிங்கில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் பதிவுசெய்துள்ள வழக்கின் விபரம் வருமாறு:
முதலாமாண்டு மாணவர்களான தோமினிக் பிரபு, கிறிஸ்டோபர் வினோத், வசந்த் கெர்சோன், விமல் ஜெபமணி ரிக் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்புகல்லூரிக்கு அருகில் உள்ள தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மூன்றாமாண்டு இன்ஜினியரிங் மாணவர்கள் சிலர் இவர்களை அழைத்துள்ளனர். இவர்களில் ஐசக் வசந்தகுமாரை தனியாக அழைத்துச்சென்றனர். இவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதையடுத்து உடன் வந்த மாற்ற மாணவர்கள் ஐசக் வசந்தகுமாரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு 15க்கும் மேற்பட்ட சீனியர் மாணவர்கள்இவர்களைத் தடுத்துள்ளனர். இதனை மீறிய பேட்ரிக் என்ற மாணவனை தனியாக அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்துள்ளனர். இந்த மாணவனின்உடைகளை அவிழ்த்து நிர்வாணமாகப் படம் எடுத்துள்ளனர்.
வெளியில் சொன்னாலோ, நிர்வாகத்திடம் புகார் கூறினாலோ, இந்தப் புகைப் படங்களை பெண்கள் விடுதியில் ஒட்டி அவமானப் படுத்துவோம் என மிரட்டிஅனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மாணவர் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார்கூறியுள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உடனடியாக செயல்பட்டு, பேட்ரிக்கின் நிர்வாணப் படங்கள் அடங்கிய பிலிம் ரோலைக்கைப்பற்றினார். மேலும், 3ம் ஆண்டு மாணவர்கள் பிரபு, சாம்சன், அசோக், ஜெய்சங்கர், மகேந்திரன், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தார்.
இந்த ராகிங் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாத கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மீதும் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 5 ல் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சரணடைந்தார். பின்னர் இவர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நவம்பர் மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications