சிபிஐ குற்றம் சாட்டிய வீரர்கள் மீது என்ன நடவடிக்கை..?
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கையில்குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையாவுடன்ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாதெரிவித்தார்.
மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கையைஅமைச்சர் தீன்ஷா புதன்கிழமை வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரணை நடத்திய சிபிஐ, தனது விசாரணை அறிக்கையில் இந்தியகிரிக்கெட் வீரர்கள் 5 பேர் குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் மீது எந்தவகையானநடவடிக்கை எடுப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவிடம் ஆலோசனை நடத்தப்படும்.
இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும். சிபிஐயின் விசாரணைஅறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்சட்டத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அவற்றின் கருத்துக்கள் கேட்கப்படும்.அதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன.
சிபிஐயின் விசாரணை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகியது உண்மைதான். குற்றம் சாட்டப்பட்டு சிபிஐவிசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாத வீரர்களின் நலன் முழுமையான அளவில்பாதுகாக்கப்படும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
சிபிஐ விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீதும் சிலகுற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அது குறித்து முத்தையாவிடம் வெள்ளிக்கிழமைஆலோசிக்கப்படும்.
சிபிஐ விசாரணை அறிக்கையால் என்ன பயன் ஏற்படும் என்பதை இப்போதைக்குச்சொல்லமுடியாது. இப்போதுள்ள சூழ்நிலையில், இப்போதைக்கு மேட்ச் பிக்ஸிங் ஏதும்நடைபெறாது என்று நினைக்கிறேன்.
கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக இப்போது சிபிஐ விசாரணை நடந்துமுடிந்து நிலையில், இந்த அறிக்கை மற்ற விளையாட்டு அமைப்புகளுக்கும் ஒருமுன்னுதாரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
மற்ற விளையாட்டுகளிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் நடைபெறாமல்தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அந்தந்த விளையாட்டுத் துறைஅதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் மற்ற விளையாட்டுத் துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் முறைகேடுகள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதைத் தடுக்க சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டியது மிகவும்அவசியம். அப்போதுதான் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கமுடியும்.
கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்காக தொலைக்காட்சிகளுக்குவழங்கப்பட்ட ஒப்பந்தம், உரிமை ஆகிவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைநடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்தவுடன், அந்த விசாரணை அறிக்கையும்வெளியிடப்படும்.
சிபிஐ விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டுமுன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்என்று இப்போது என்னால் கூறமுடியாது. இது பற்றி முதலில் சட்ட அமைச்சகத்திடம்ஆலோசனை நடத்தப்படும்.
தானாகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டால் மன்னிப்பு அளிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. ஆனால், குரோனியே தவிர மற்றவர்கள் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன் வரவில்லை.
இப்போது குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது. பலமாதங்கள் கஷ்டப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மையைக்கண்டறிந்துள்ளனர். அந்த முயற்சி பாழாகிவிடக்கூடாது.
இப்போது காலம் தாழ்ந்துவிட்டது. சிபிஐ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட வீரர்கள்யாருக்கும் மன்னிப்பு வழங்கப்படாது. அரசு ஊழியர்களாக இருக்கும் அசாருதீன், அஜய்சர்மா இருவர் மீதும் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
அவர்கள் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சட்ட அமைச்சகம்தான்முடிவு செய்யும்.
இந்தியாவில் விளையாட்டின் தரத்தை மேம்படுத்துவது குறித்து என்னென்னநடவடிக்கைகள் மேற்கொள்பது என்பது பற்றி ஆலோசனை நடத்த நவம்பர் 22-ம் தேதிஅனைத்து மாநில விளையாட்டு அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறும்என்றார் தீன்ஷா.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications