அமைச்சரை நீக்குங்கள் .. திமுக எம்.எல்.ஏ. போர்க்கொடி
கோவை:
கோவை தி.மு.க.வில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. அமைச்சரும்,எம்.எல்.ஏ.வும் நேருக்கு நேர் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ.வின்சட்டை கிழிந்தது. அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் மாவட்டச் செயலராகவும், கோவை மேற்குத் தொகுதிஎம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் சி. டி. தண்டபாணி. இவருக்கும் கோவைசிங்காநல்லூர் எம்.எல்.ஏ.வும் மாநில மாசுக் கட்டுப்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமிக்கும் இடையே நீண்ட நாட்களாகபூசல் இருந்து வந்தது.
அமைச்சர் பழனிச்சாமி பதவிக்கு வரும் முன்னர் கோவை புறநகர் மாவட்டச்செயலராக இருந்தார். தற்போது இவரது மனைவி விஜயலட்சுமி பழனிச்சாமி புறநகர்மாவட்டச் செயலராக உள்ளார்.
இந்நலையில் மாநகர் மாவட்டச் செயலராக உள்ள சி. டி தண்டபாணி, புறநகர்பகுதியில் உள்ள கிட்டாம்பாளையம் என்ற ஊரில் அண்ணா தொழிற்கூட வளாகம்ஒன்றை ஏற்படுத்த முயற்சித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கானஅடிக்கல் நாட்டு விழா அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொள்ள மாநில தொழிற்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியை எம்.எல்.ஏஅழைத்துள்ளார்.
இதற்கு ஒப்புக் கொண்டு அமைச்சர் பெரியசாமி கோவை சர்க்யூட் ஹவுசிற்குவந்துள்ளார். அவரை வரவேற்க எம்.எல்.ஏ. தண்டபாணி சென்றுள்ளார். அங்குஏற்கனவே வந்திருந்த அமைச்சர் பழனிச்சாமி, புறநகர் மாவட்டத்தில் நடக்கும்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் கலந்து கொள்ளக்கூடாது என்று அமைச்சர்பெரியசாமிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதைஎம்.எல்.ஏ.விடம் அமைச்சர் பெரியசாமி நாசூக்காக கூறியுள்ளார். ஆனால்தண்டபாணி, நான் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தவன் என்ற வகையில் கலந்துகொள்வேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் புறநகர், மாநகர் பிரச்சினை எழுந்தது. அதிமுகவை எதிர்த்து நாளை நடக்கஇருக்கும் பேரணி குறித்து எப்படி அறிக்கை விடலாம், இது மட்டும் நியாயமா? என்றுஅமைச்சர் பழனிச்சாமியிடம் தண்டபாணி கேட்டுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வை, அமைச்சர்தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். கோபமடைந்த தண்டபாணி, அமைச்சர்பழனிச்சாமியின் சட்டையைப் பிடித்து இழுத்தார்.
அமைச்சரும் பதிலுக்கு எம்.எல்.ஏ.வின் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.இதில் தண்டபாணியின் சட்டை கிழிந்தது. மேலும், தான் அணிந்திருந்த செருப்பைக்கழற்றி அவர் மீது அமைச்சர் வீசினார்.
பிரச்சினை தீவிரமடைவதை உணர்ந்த அங்கிருந்த மற்றொரு அமைச்சர்பெரியசாமியும், ராஜ்சபை உறுப்பினர் சுப்பையனும் தலையிட்டு எம்.எல்.ஏ.வையும்அமைச்சரையும சமாதானப்படுத்தினர். ஆனால், எம்.எல்.ஏ. அந்த இடத்தை விட்டுஆவேசமாக வெளியேறிவிட்டார்.
இச் சம்பவத்தை அடுத்து அவரது ஆதரவாளர்களும் கடும் கோபமடைந்தனர்.இதையடுத்து சர்க்யூட் ஹவுசில் இருந்த போலீஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.
அப் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தண்டபாணியின்ஆதரவாளர்கள் டவுன் ஹால், அவிநாசி சாலை ஆகிய இடங்களில் சாலை மறியலில்ஈடுபட்டனர். இதனால், கோவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில்ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
"அமைச்சரை நீக்காவிட்டால் ராஜினாமா
இச் சம்பவத்துக்குப் பிறகு நிருபர்களிடம் எம்.எல்.ஏ. தண்டபாணி பேசினார்.என்னைத் தாக்கிய அமைச்சரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்துநீக்க வேண்டும். இல்லையென்றால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர்கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கருமத்தம்பட்டி- அன்னூர் ரோட்டில் உள்ளகிட்டாம்பாளையத்தில் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டை வளாகம் அமைக்ககடந்த 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போதே முடிவு செய்யப்பட்டது. ஆனால்அப்போது இத்திட்டம் நிறைவேறவில்லை.
நான் மேற்கொண்ட முயற்சியின் பலனாக மத்திய, மாநில அரசுகள் மானியம்அளித்தன. எனவே இந்தத் தொழிற்பேட்டையைத் திறக்க மாநில அமைச்சர்ஐ.பெரியசாமியை அழைக்க முடிவு செய்தேன். அமைச்சரும் கலந்து கொள்ள ஒப்புதல்அளித்தார்.
இந்த விழாவை நடக்க விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் அமைச்சர்பழனிச்சாமி மறைமுகமாக மேற்கொண்டார். இதையும் மீறி இதனை நடத்த முடிவுசெய்தேன்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அக்டோபர்31-ம் தேதி நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி கோவைவந்திருந்தார். சர்க்யூட் ஹவுசில் தங்கியிருந்த அவரை நான் சென்று வரவேற்றேன்.
அப்போது அங்கு எனக்கும், அமைச்சர் பழனிச்சாமிக்கும் இடையே நடந்த தகராறுக்குபழனிச்சாமிதான் காரணம். அங்கிருந்த அமைச்சர் பழனிச்சாமியின் மனைவிவிஜயலட்சுமி, எனது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார்.
நடந்த சம்பவம் குறித்து முதல்வருக்கு நான் பேக்ஸ் அனுப்பியுள்ளேன். அமைச்சர்பழனிச்சாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.இல்லையென்றால், நான் மாநகர் மாவட்டச் செயலர் பதவியை ராஜிநாமா செய்துவிடுவேன்.
இதில் எவ்வித சமரசம் செய்து கொள்ளவும் நான் தயாராக இல்லை. பழனிச்சாமியைசும்மா விடமாட்டேன் என்றார் தண்டபாணி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications