சென்னை விரைகிறார் கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலை தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம் என்று விவாதிப்பதற்காககர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கவுள்ளார்.
பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே இத்தகவலைத் தெரிவித்தார்.
நாகப்பா தப்பி வந்துள்ள சூழ்நிலையில், காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் பேசச் சென்ற அரசுத் தூதர்நக்கீரன் கோபால் சென்னை திரும்பியுள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துதமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் பேச்சு நடத்துவார்கள். இதற்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாசென்னை செல்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications