மக்கள் சேவையில் கோவை போலீஸ்
கோவை:
சட்டம் ஒழுங்கைப் பராமரித்து குற்றவாளிகளைக் கைது செய்து வந்த கோவை போலீசார் இப்போது சமூக சேவையிலும் ஈடுபடுகின்றனர்.
குழாயில் குடிநீர் வரவில்லையா? தெருவிளக்கு எரியவில்லையா? ரோடு குழியாக உள்ளதா? இனி கவலை வேண்டாம், மாநகராட்சியிடம் புகார் செய்யவேண்டியதில்லை. அதற்கும் மாநகரக் காவலிடமே புகார் செய்தால் போதும். இந்த குறைகளை நிவர்த்தி செய்ய போலீசாரே நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.இத்தகைய "மக்கள் நலத் திட்டம் கோவையில் அறிமுகமாகிறது.
இது பற்றி கோவை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க போலீஸ் துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 12போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுவான பிரச்னைகளை பொதுமக்கள் நேரடியாக போலீசாரிடமே புகார் கூறலாம்.
இந்த புகார்களைப் போலீசார் கவனிக்கவும், சமுதாயக் குற்றவாளிகளைத் திருத்தும் பணியிலும் போலீசார் ஈடுபடுகின்றனர். இதற்கு உதவ தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முன் வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் சமுதாயக் கூடம்அமைத்தல், என்ன படிக்கலாம் என ஆலோசனை கூறுதல், வேலை வாய்ப்பு என்று அவ்வப்போது விளக்கிக் கூறவுள்ளனர்.
இது தவிர, சுற்றுப் புறத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், சிறு சேமிப்பு, சுயதொழில் ஆகியவற்றிற்கும் ஆலோசனை தரப் போகின்றனர்.
மக்கள் நலத் திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டம் வரும் நவம்பர் 14ம் தேதி துவங்கப்படுகிறது. இதன் மூலம் சமுதாய முன்னேற்றம்ஏற்படுவதோடு, குற்றவாளிகள் குறையவும் வாய்ப்பு ஏற்படுகிறது. மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நட்பு அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாகஅமையும்.
இது தவிர, பெண்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்க தனியாக ஒரு டெலிபோன் ஒதுக்கப்படுகிறது. தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்ல இந்தடெலிபோன் உதவும். வரதட்சணை உள்பட பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கமிஷனர் அலுவலகத்திற்குப் போன் செய்து சொன்னால், போலீசார் உரியநடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications