யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேற புலிகள் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் கொழும்பு உள்பட பல நகரங்களில் புலிகளின் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கவும், யாழ்ப்பாணத்தைபுலிகளிடமிருந்து மீட்கவும் ராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

புலிகளின் பதுங்கு குழிகள் மீது விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தன் முதல்கட்டமாக, சாகவகச்சேரி பகுதியைபுலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையே, ராணுவம் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரியை அடுத்துள்ள தென்மராச்சி பகுதி மக்கள் அனைவரும் உடனடியாக வேறு இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்று செய்திவெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியதாவது:

யாழ்ப்பாணம் பகுதியில் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் எச்சரிக்கையால் அப்பகுதி மக்கள்பெரும் பீதி அடைந்துள்ளனர். வடக்கு கிளிநொச்சி பகுதியில் புலிகள் குவிந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக கிலாலி, மட்டுவில் போன்ற பகுதிகளில்புலிகள் தாக்குதல் நடத்தினர் என்றார் சனத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+