வீரப்பன் கோரிக்கைகள் நியாயமானதே.. நெடுமாறன்
சென்னை:
வீரப்பன் விடுத்துள்ள கோரிக்கைகள் நியாயமானதே. அதைப் புரிந்து கொள்ளாமல்சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
தென் செய்தி என்ற இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரையில்கூறியுள்ளதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியுள்ள நிகழ்ச்சி தமிழகம்,கர்நாடகம் ஆகியஇரு மாநிலங்களிலும் தினமும் பேசப்பட்டு வரும் பரபரப்பு நிகழ்ச்சியாகிவிட்டது.
இதையொட்டி வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் நீண்ட காலமாகவே தமிழர்அமைப்புகளாலும் மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்பட்டகோரிக்கைகளேயாகும்.
ஆனால் இந்த கோரிக்கைகளில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ளாமல்வீரப்பனைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளில் சில அரசியல் தலைவர்களும் சிலபத்திரிக்கைகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
1955-ம் ஆண்டு காலாவதியான தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டநூற்றுக்கணக்கானவர்கள் அப்பாவிகள் என்பதும், அவர்கள் மீது பொய்யானவழக்குகள் தொடுக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதும்மறுக்க முடியாத உண்மைகள் ஆகும்.
வீரப்பனுக்கு உதவியதாக அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைஎன வைத்துக் கொண்டால் கூட அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனைவழங்கலாம். ஆனால் அவர்கள் 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் அடைபட்டுகிடக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்களில் பலர் 70 வயதைத்தாண்டியவர்கள். அவர்கள் வாழ்வே சிறையில் முடிந்துவிடக் கூடும்.
இந் நிலையில் இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வருமாறு வீரப்பன் அனுப்பியஅழைப்பை ஏற்று நானும்,பேராசிரியர் கல்யாணி மற்றும சுகுமார் ஆகியோர்காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுத் கேட்டுக்கொண்டார். கர்நாடக முதல்வரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார்.
எங்கள் மீது சேற்றை வாரியிறைக்கும் அரசியல் தலைவர்களுக்கும்பத்திரிக்கையாளர்களுக்கும் மகா பாரதக் கதை ஒன்றை நினைவுபடுத்தவிரும்புகின்றேன். குருவான துரோணரிடம் பாண்டவர்களும், கவுரவர்களும்வில்வித்தைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொலைவில் இருந்த மரத்தின்கிளையில் அமர்ந்திருந்த பறவை ஒன்றை குறி வைத்துக் கணையைச் செலுத்துமாறுதுரோணர் கூறினார்.
அவர்கள் வில்லில் நாணேற்றி அம்பை விடத் தயாராக நின்றார்கள். அர்ச்சுனா உனக்குமரம் தெரிகிறதா என்று துரோணர் கேட்டார். அர்ச்சுனன் இலலை என்றான். கிளைதெரிகிறதா என்றார் குரு. இல்லை என்றான் விஜயன். இலை தெரிகிறதா என்றார் குரு.அதுவும் இல்லை என்றான் காண்டிபன். அப்படியானால் என்னதான் உனக்குத்தெரிகிறது என்று கேட்டார் குரு. அந்தப் பறவையின் கண் மட்டுமே தெரிகிறதுஎன்றான் அர்சுனன். விடு கணையை என ஆணையிட்டார் குரு. அம்பு பறந்தது.பறவை வீழ்ந்தது.
இதைப் போல் எங்கள் மனித நேயக் குறிக்கோளிலேயே நாங்கள் கவனமாகஇருக்கிறோம். ஏற்றுக் கொண்ட மனித நேயப் பணிகளை நிறைவேற்றுவதற்குமுனைப்புடன் செயல்படுவோம் என்று கட்டுரையில் கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications