நிறைவடைந்தது சிட்னி ஒலிம்பிக் - ஏதென்ஸில் அடுத்த ஒலிம்பிக்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த இந்தமில்லேனியத்தின் முதலானதும், மொத்தத்தில் 27-வதுமான ஒலிம்பிக் போட்டிகள்ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றன.
தொடக்க விழா நிகழ்ச்சிகளைப்போலவே நிறைவு விழாவும் நடைபெற்றது. நிறைவுவிழாவின் சிறப்பு அம்சமாக வாண வேடிக்கைகள் நடத்திக் காட்டப்பட்டன.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2004-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில்நடைபெற உள்ளன. இங்குதான் நவீன ஒலிம்பிக்கின் முதல் போட்டி 1896-ம் ஆண்டுநடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவிலும் பலவிதமான கலைநிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன. சிட்னி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிறைவு விழாவின் முதல்நிகழ்ச்சியாக, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகளின் தேசியக் கொடிகள்வரிசையாக மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
நிறைவு விழாவின் தொடக்கமாக ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் நாட்டின் பெரிய தேசியக்கொடிகள் மைதானத்தில் ஏற்றப்பட்டன.
அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தாங்கள்வென்ற பதக்கங்களுடன் மைதானத்துக்குள் ஓடிவந்து மைதானத்தின் மையப் பகுதியில்குழுமி நின்றனர்.
அதன்பிறகு சில கலை நிகழச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக்கமிட்டித் தலைவர் அந்தோனியோ சாமரான்ச், சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மைக்கேல் நைட் ஆகியோர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புமேடைக்கு வந்தனர்.
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கும், போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க உதவி அனைவருக்கும்மைக்கேல் நைட் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து சாமரான்ச் பேசினார். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயேசிட்னி ஒலிம்பிக் போட்டிதான் சிறந்தது என்று அவர் பாராட்டினார். ஒலிம்பிக் போட்டிகளைஎந்தவித சிறு பிரச்சினையும் இல்லாமல் நடத்தி முடித்த ஆஸ்திரேலிய நாட்டுக்கு ஒலிம்பிக்கமிட்டி சார்பில் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவரது பேச்சைத் தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஏதென்ஸ்நகர மேயரிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. அப்போது கிரீஸ் நாட்டின் கலைநிகழ்ச்சிகள் நடத்திக் காட்டப்பட்டன.
இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 8விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மேடைக்கு அழைக்கப்பட்டுஅறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு 27-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெறுவதாக சாமரான்ச்அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு மைதானத்தில் கடந்த 16 நாட்களாக பறந்துகொண்டிருந்த ஒலிம்பிக் கொடி கீழே இறக்கப்பட்டது. மேலும், மைதானத்தில் எரிந்துகொண்டிருந்த ஒலிம்பிக் ஜோதியும் அணைக்கப்பட்டது.
இறுதியாக வேறு சில கலை நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் நடத்திக்காட்டப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications