குடியேற்ற அனுமதி கோரி 100 இந்தியர்கள் நியூசிலாந்தில் உண்ணாவிரதம்
வெலிங்டன் (நியூசிலாந்து):
நியூசிலாந்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் சீன அகதிகளுடன், தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்ட 100இந்தியர்களும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
தலைநகர் ஆக்லாந்தில் உள்ள முக்கியப் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சீன அகதிகள், தங்களுடன் சேர்ந்து போராட வருமாறு இந்தியமற்றும் பாகிஸ்தானிய அகதிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நியூசிலாந்து அகதிகள் கவுன்சில் தலைவர் நாகலிங்கம் ராசலிங்கம்,100-க்கும் மேற்பட்ட இந்திய, பாகிஸ்தானிய அகதிகள், சீனர்களுடன் சேர்ந்து போராடுவார்கள் என்று நியூசிலாந்து பத்திரிகை ஒன்றில் செய்திவந்துள்ளது.
நியூசிலாந்தில் தங்க அனுமதி வழங்கக் கோரி 25-க்கும் மேற்பட்ட சீன அகதிகள் புதன்கிவமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களில் 4 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போராட்டம் குறித்து நியூசிலாந்து குடியேற்றத் துறை அமைச்சர் லியானே டால்சியல் கூறுகையில், நியுசிலாந்தில் 8000 க்கும் மேற்பட்டவெளிநாட்டினர் இங்கேயே 5 வருடத்திற்கு மேல் வாழ்ந்து, இங்குள்ளவர்களையே திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு வேண்டுமானால்நிரந்தரக் குடியுரிமை வழங்கலாம். ஆனால், பின்கதவு வழியாக, அதாவது அனுமதியின்றி வரும் பிறநாட்டினரை நியுசிலாந்து ஒருபோதும் ஏற்காதுஎன்றார்.
ஆனால் இதுகுறித்து நியுசிலாந்து அகதிகள் கவுன்சில் தலைவர் ராசலிங்கம் கூறுகையில், நியுசிலாந்துக்கு வரும் அகதிகள் தாஙகள் தங்குவதற்கு அரசுஉடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. குடியேற்றத்துறை விதிகளின் படியும், அமைச்சர் லியானே டால்சியல் கூறுவதுபோலவும் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications