இலங்கை தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது
கொழும்பு:
இலங்கையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிகிறது.
இனவெறியைத் தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்து வரும் ஜனதா விமுக்தி பெரமுனா, தேசிய சிங்கள உருமயாகட்சிகளுக்கும் இம்முறை அதிக வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால், புதிய ஆட்சி அமைவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் அதிக பங்கு இருக்கும். ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியகட்சியும் இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இவர்களுக்கு இணையாக ஜனதா விமுக்தி பெரமுனாவும், தேசிய சிங்கள உருமயா கட்சிகளும் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகள் தவிர மேலும் 29 கட்சிகளும் 99 சுயேச்சை அமைப்புகளும்தேர்தல் களத்தில் உள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட இருவேறு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியும், எத்க் கட்சிக் கூட்டணியும்முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
சர்வே ரிசர்ச் லங்கா என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 45.6 சதவீத வாக்குகள் ஆளும் கட்சிக்கும் 40சதவீத வாக்குகள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் எனத் தெரியவந்தது.
ஆனால், ரிசர்ட் இண்டர்நேசனல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இலங்கையின் எதிர்க் கட்சி 38.1சதவீத வாக்குகளையும் ஆளும் கட்சி 37.9 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்தது.
இந்த இரு மாறுபட்ட கருத்துக் கணிப்புகளும் இரு வேறு பத்திரிகைகளுக்காக நடத்தப்பட்டவை.
இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் இரு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, தொகுதிகளை கைப்பற்றுவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. மற்றொன்று இந்த இரு கட்சிகள் மீதும்மக்கள் கடும் கோபத்தில் இருப்பதும் தெரியவருகிறது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்.
இனப் பிரச்சனை தான் தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி சண்டைக்கு இடையே ஜனதா விமுக்தி பெரமுனாவின் இனரீதியான பிரச்சாரத்துக்குஅதிக லாபம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications