டான்சி .. ஜெ.வுக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 5 பேருக்கு சிறப்பு நீதிமன்றம்விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து வெள்ளிக்கிழமைஉத்தரவிட்டது.

தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அரசுக்குகோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர் முகம்மது ஆசிப் உள்பட 5பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

3-வது சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில்கடந்த அக்டோபர் 9-ம் தேதி நீதிபதி பி. அன்பழகன் தீர்ப்பளித்தார். ஜெயா, சசி உள்பட 4பேருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், முன்னாள் அமைச்சர் முகம்மதுஆசிப்புக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இத் தீர்ப்பை எதிர்த்து 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.சாட்சிகளை சரியாக விசாரிக்காமல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தண்டனையைரத்து செய்யவேண்டும். மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் வரைதண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று 5 பேரும் தங்களது மேல் முறையீட்டுமனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி. அக்பர் பாஷா கத்ரி, மேல் முறையீட்டுமனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்திவைத்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

அது தவிர, தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும்அதே மதிப்புள்ள மேலும் இரு நபர் ஜாமீன் தொகைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிஉத்தரவிட்டார்.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பேரும், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைக்குஅடுத்த இரு மாதத்துக்குள் தயாராகவேண்டும். தாமதமானால் ஜாமீனையும், சிறப்புநீதிமன்றம் விதித்த தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடையையும் ரத்து செய்யும்படி எதிர்தரப்பு வாய்ப்பு கொடுத்தது போல் ஆகிவிடும்.

ஆகவே 2 மாதத்துக்குள் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைக்குத் தயாராகும்படி 5பேருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+