ரயில் திட்டங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது ..வாழப்பாடி
சென்னை:
ரயில் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியில் 10 சதவீதம் குறைத்து ஒதுக்கியுள்ளார்கள். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிதிகுறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டிய விருத்தாச்சலம்- கடலூர், விருதுநகர்-ராமேஸ்வரம் மற்றும் ஒரு சில குறுகிய ரயில் பாதைகள்அகல ரயில் பாதைகளாக மாற்றும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.
பல மாநிலங்களில் அகல ரயில் பாதைகள் மாற்றும் பணி முடிந்து விட்டது. தமிழ்நாடு மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சென்னையிலிருந்து, மதுரைக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இது இன்னும் நிறைவேற்றப்படாததால், ரயில்வே நிர்வாகம் 10 சதவீத நிதி குறைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்க முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 வது அணி அமைந்தால் நிச்சயமாக திமுக வுக்குத்தான் அதிகமான வெற்றி வாய்ப்பு கிடைக்கும். வருகிற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா,சசிகலா, தினகரன் ஆகியோர் போட்டியிட முடியாது.
இப்போது, சேனாதிபதி இல்லாத படையாகவும், மாலுமி இல்லாத கப்பலாகவும் அதிமுக உள்ளது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications