எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு பஜனைப் பாடல்கள்
ஜோகன்னஸ்பெர்க்:
தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளில் பஜனைப் பாடல்கள் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில், கைஷா பார்க் ஆரம்பப் பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றி வரும் யோக பிரசாத் நாயுடு இதுகுறித்துக் கூறியதாவது:
லெனேசியா பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அதிக அளவு எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது. எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுக்க மதத் தலைவர்கள், தனியார்அமைப்புக்கள், கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மூலம், விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஊர்வலங்கள்ை ஆகியவற்றை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் இந்த பிரசாரம் நடத்தப்படும். பஜனைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் மற்றும் பல்வேறு எய்ட்ஸ் ஒழிப்பு பிரசார அமைப்புகளைச்சேர்ந்தவர்களின் உரைகள் மூலமாக பிரச்சாரங்கள் நடத்தப்படும்.
எய்ட்ஸ் கிருமி குறித்து பலூன்களை வானில் வெடித்து, அவை குறித்து மக்களிடம் விளக்கப்படும். எய்ட்ஸ் நோய் நமது சமுதாயத்தைச் சேர்ந்ததல்ல. நமக்கு எய்ட்ஸ்நோய் வந்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
எய்ட்ஸ் ஒழிப்புக்காக பள்ளிகள் தங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க தேசிய எய்ட்ஸ் கவுன்சில் யோசனை தெரிவித்திருந்தது. அதையடுத்துஇந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டவுள்ளது என்றார் நாயுடு.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications