தாய்ப்பாலுக்கு அடுத்து சிறந்தது எது?
சேலம்:
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் எண்ணங்களுக்குப் போய்ச் சேருவதுதாய்மொழி. தாய் மொழி மூலம் கற்கும் பாடம் எளிதாக மாணவர்களைச் சென்றடையும்என தமிழகக் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.
சேலத்தில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு எம்.எல்.ஏ. தங்கவேல்தலைமை வகித்தார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்மாநாட்டு மலரை வெளியிட்டார்.
துவக்க விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
மன வளர்ச்சியை விட அறிவு முக்கியமானது. அறிவு வளர்ச்சி பெற குழந்தைகளுக்குத்தன்னம்பிக்கை தேவை. அதற்கு கல்வியில் இனிமை சேர்க்க வேண்டும்.
குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்க்க, ஆசிரியர்கள் பொய்யான பலகதைகளைச் சொல்லலாம். நமது இதிகாசங்கள் பொய் சொல்லும்போது ஆசிரியர்கள்பொய் சொல்வதில் தவறு இல்லை.
குழந்தைகளிடம் கல்வி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆசிரியரின் கடமை.ஆசிரியர்கள் ஓடியாடி, நடனமாடி மகிழ்வோடு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்.
சம்பளத்திற்கு வேலை செய்வது என்றால், அது பணத்திற்கு அடிமை என்பதாகும்.சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ற பூரிப்போடு பாடம் நடத்த வேண்டும்.சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளுக்கு ஒப்பானவர்கள் ஆசிரியர்கள்.
கல்வி வழங்குவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமை என உணரும்போதுகல்வித் தரம் உயரும். கற்போரின் எண்ணிக்கையும் உயரும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நிறைய பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.பல பள்ளிகளின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் 500நடுநிலைப் பள்ளிகள், 300 உயர்நிலைப் பள்ளிகள், 250 மேல்நிலைப் பள்ளிகள்துவக்கப்பட்டுள்ளன.
முன்பு கல்வி மேல் ஜாதிக்கார்கள், பணக்காரர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் என்ற நிலைஇருந்து வந்தது. தற்போது இந்த நிலை மாறி விட்டது. அனைவரும் கல்வி கற்றாகவேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் கல்வி என்பது ஜனநாயகக்கடமை.
அன்பு இருக்கும் இடத்தில் ஆண்டவன் இருக்கிறான். ஆட்சியில் இருந்துகொள்ளையடிப்பவர்களைக் கண்டால், ஆண்டவனே தூக்கு மாட்டிக் கொள்கிறான்.கடவுளை உணர, வஞ்சம், புகழ்ச்சி, சூழ்ச்சி இல்லாதவனாக மனிதன் இருக்க வேண்டும்.இரக்கமுள்ளவனாக இருக்க வேண்டும்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளின் மனதைச் சென்றடைவது தாய்மொழி.ஆங்கிலம் படித்தவர்கள் முன்னேறுவது உண்மை. ஆனால் அவர்கள் எல்லோரும்குழந்தைப் பருவத்திலிருந்து ஆங்கிலம் கற்றவர்கள் அல்ல. வயது வந்தவுடன் படித்தவர்கள்அவர்கள். சில பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இப்படிச் செய்பவர்கள் சூடுசொரணையற்றவர்கள்.
ஆசிரியர்கள் குறை உள்ளத்தோடு பணியாற்றினால் நிறைவடையாது. ஆசிரியர்கள் மனநிறைவோடு பணியாற்ற வேண்டும். அப்போது தான் தமிழகம் முன்னேறும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications