உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

அரசியல் நாகரிகம், தரமுள்ள பேச்சு, பண்பு குறையாத வாதப் பிரதிவாதங்கள்போன்றவை எல்லாம், தமிழக அரசியலிலிருந்து காணாமற் போய், வருடங்கள் பலஆகின்றன என்பது உண்மைதான்.

தமிழன் நாகரிகம், தமிழ்ப் பண்பு என்றெல்லாம் பேசியே தங்களை வளர்த்துக்கொண்ட கழகங்களின் தலைவர்கள் - மனித நாகரிகத்தையும், மனிதப் பண்பையும்விழுங்கி ஏப்பம் விட்டு, முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகின்றன.

ஆகையால் இரு கழகத்தினர் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் போது, அதில் நிதானத்தைஎதிர்பார்க்க முடியாது என்பது நமக்குத் தெரிந்துதான் இருக்கிறது. இருந்தாலும் கூட,இவர்களுடைய சமீபத்திய சவடால்கள் நாராசமாகத்தான் இருக்கின்றன.

இப்போதைய ஏச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்தவர் ஜெயலலிதா. அதற்கானமேடை, அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம். கருணாநிதியைஎவ்வளவுக்கெவ்வளவு அநாகரிகமாகப் பேச முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவுபேசினால்தான் ஜெயலலிதாவிடம் நற்பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கை,அ.இ.அ.தி.மு.க.வினருக்கு நிறையவே இருக்கிறது. ஆகையால் கருணாநிதியைக்கண்டபடி ஏசி, தலைவியின் நம்பிக்கையைப் பெற, பலரும் அங்கு போட்டியிட்டதில்வியப்பில்லை.

ஆனால், ஜெயலலிதாவே, நாம் ஆட்சிக்கு வரும்போது, கருணாநிதி உயிரோடுஇருந்தால், அவரை ஆயுள் முழுதும் சிறையில் வைப்போம் என்று பேசி, தன்னுடையகோபத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பேச்சில், அரசியல் முதிர்ச்சியை தேடினாலும் கிடைக்காது. அரசியல்நாகரிகத்திற்கும், இந்தப் பேச்சுக்கும், துளியும் சம்பந்தமில்லை.

இந்தப் பேச்சுக்குப் பதில் கூறியிருக்கிற அமைச்சர் ஆற்காடு வீராசாமி,அநாகரிகத்தில்அ.இ.அ.தி.மு.க. வுக்கு தி.மு.க. சற்றும் சளைத்ததல்ல என்பதை நன்றாகவேநினைவூட்டியிருக்கிறார்.

கலைஞர் நினைத்தால் ஜெயலலிதாவை ஆயுள் முழுதும் சிறைக்குள் தள்ளமுடியாதா?என்பது அவருடைய அடக்கமான, பண்பு நிறைந்த

கேள்வி. கருணாநிதிதான் நீதிமன்றம் - ஆற்காடு வீராசாமியின் சொல்லமுதம் தான்சட்டம் - என்றாகி விட்டால், அப்போது இது நடக்கலாம்.

மற்றபடி,முதல்வர் நினைத்தால் ஒருவரை ஆயுள் முழுதும் சிறையில் தள்ளுவதுஎப்படி? சட்டம், நீதிமன்றம் என்றெல்லாம் இருப்பதையும், அவற்றுக்கு ஆதாரங்கள்,சாட்சியங்கள் தேவைப்படுவதையும் கூட இவர்கள் மறந்து விட்டார்கள். அந்தஅளவுக்கு அதிகார போதை தலைக்கேறியிருக்கிறது.

சொல்லப்போனால், இந்த மாதிரி பேச்சுகளை தமிழக அரசியலில் ஆரம்பித்துவைத்ததே தி.மு.க. தான். அன்றைய எதிரி காமராஜைப் பற்றியே கூட நிதானத்துடன்பேச வேண்டும் என்று நினைக்காத தி.மு.க. தலைவர்கள், இன்றைய எதிரிகள் பற்றிவாயில் வந்தபடி பேச தயக்கம் காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும்அர்த்தமில்லை.

இப்போது ஜெயலலிதாவின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்கதி.மு.க. முனைந்து விட்டது ; தமிழகமெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடைபெறப்போகின்றன ; பதிலுக்கு பதிலடி தரும் வகையில் ,

பதில் பதிலடி கூட்டங்களை அ.இ.அ.தி.மு.க. நடத்தும் என்று நிச்சயமாகஎதிர்பார்க்கலாம் ; நமக்கு குறையே இல்லை. தமிழகத்தின் தெருவெல்லாம், இரு கழகப்பிரச்சார சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடப் போகின்றன. தமிழ் மணம் பரப்புகிறோம்என்று இவர்களெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்!

என்ன செய்வது? தோல்விகளும், தீர்ப்புகளும் ஜெயலலிதாவிடம் எந்த மாற்றத்தையும்இன்னமும் தோற்றுவிக்க வில்லை என்பது - அவருடைய துரதிருஷ்டம்.

அ.இ.அ.தி.மு.க. தான் தி.மு.க.வுக்கு மாற்றாக இன்னமும் மக்கள் கண்களில் தெரிகிறதுஎன்றால் - தமிழகத்தின் தலையெழுத்து. இதை ஏற்க மறுப்பவர்கள் தி.மு.க.வைத்தான்ஏற்க வேண்டும் என்ற நிலை - தமிழகத்தின் சாபம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+