ஜெ.வுக்கு நாக்கில் சனி .. கூறுகிறார் அமைச்சர்
ஈரோடு:
ஜெயலலிதா தன்னைத் தானே அழித்துக் கொள்வார். நாம் அவசரமோ ஆத்திரமோ அடைய வேண்டியதில்லை.அவரது நாக்கில் சனி பிடித்து ஆட்டுகிறது என மாநில கைத்தறித் துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.
ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தில் அ.தி.மு.க.,வைக் கண்டித்து தி.மு.க. கண்டனப் பேரணி நடத்தியது.இந்தப் பேரணியில் மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளுக்கு மக்கள் மட்டுமல்ல, நீதிமன்றமும் கூட தீர்ப்பு வழங்கிவிட்டது. அவர் செய்த ஊழலுக்கு மக்கள் அளித்த தண்டனையை அனுபவித்து வருகிறார்.
தற்போது அரசியலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார். தனது கட்சியைக் காப்பாற்ற வாய்க்கு வந்தபடிஎதை எதையோ பேசி வருகிறார்.
ஜெ.வுக்கு நாக்கில் சனிபிடித்து ஆட்டுகிறது. நாம் யாரும் அவசரமோ, ஆத்திரமோ பட வேண்டியதில்லை. அவரேதன்னைத் தானே அழித்துக் கொள்வார். மக்களே அவருக்கு விரைவில் பதில் கூறுவர்.
நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதையே திமுக. ஆட்சி செய்து வருகிறது. இப்போது அவையெல்லாம், விட்டுவிட்டு அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டும்என்ற தலையெழுத்தாகி விட்டது. லஞ்ச லாவண்யத்தைக் கற்றுக் கொடுத்தது அ.தி.மு.க. தான் என்றார் அமைச்சர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications