யார் காலிலும் விழ மாட்டேன் ..ஜெ.
மதுரை:
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்காகப், பிரதமர் வாஜ்பாயின் காலிலோ அல்லது தமிழக முதல்வர் கருணாநிதியின் காலிலோவிழ மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் அதிமுக சார்பில் நடத்தப்படும் சட்ட உதவி முகாமை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதி, என்னை அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், என் மீது பல பொய்வழக்குகளை ஜோடனை செய்து, வழக்குத் தொடர்ந்துள்ளார்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்காக நான் கருணாநிதி காலிலோ, பிரதமர் வாஜ்பாய் காலிலோ விழ மாட்டேன்.வேண்டுமென்றே சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும், வழக்குகள் குறித்தும் பயப்பட மாட்டேன். வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும்வரை தொடர்ந்து போராடுவேன்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் சேர்ந்து கொண்டு தனித் தமிழ் தேசத்தை உருவாக்க வேண்டும் என்று கருணாநிதிநினைக்கிறார் என்றார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications