அகதியாக அங்கீகரிக்கக் கோருகிறார் தலாய் லாமாவின் வாரிசு
டெல்லி:
திபெத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் வாரிசான கர்மாபா உக்யன் ட்ரின்லேடோர்ஜி தன்னை அகதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்த மதத்தின் ஒரு பிரிவான கர்மா காக்யூ அமைப்பைச் சேர்ந்தவர் டோர்ஜி. 14 வயதாகும் இவர் அடுத்த தலாய் லாமாவாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.17-வது தலாய் லாமாவாக இருக்கும் இவர், திபெத்திலிருந்து, ஜனவரி 5-ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள தர்மஸ்தாலாவுக்கு வந்தார்.தர்மஸ்தலாவில்தான் தலாய் லாமாவின் திபெத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு தப்பி வந்த கர்மாபா, செப்டம்பர் 19 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், திபெத்திலிருந்துவந்த தனக்கும், தன்னுடன் வந்த தன் தங்கை நகோதப் பல்சோப் உள்பட 6 பேருக்கும் அகதி அந்தஸ்து வழங்க வேண்டும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள திபெத்திய புத்த ஆலயங்களுக்கு செல்வது மற்றும் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கான அனுமதியைச் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, கர்மாபாவுக்கு அகதி அந்தஸ்து தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தலாய்லாமாவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்தியஅரசுஅதை ஏற்றுக் கொள்ளவில்லை. கர்மாபா, தற்போது தர்மஸ்தாலாவில் உள்ள கியூடோ கோவிலில் தங்கியுள்ளார். அவர் வேறு எங்கும் செல்லஅனுமதி கிடையாது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, திபெத்திலிருந்து கர்மாபா தப்பி வந்தது மர்மமாக இருக்கிறது. சீனஅதிகாரிகளின் பலத்த பாதுகாப்பையும் மீறி எப்படி இந்தியாவுக்கு வந்தார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. அவருக்கு இந்தியாவில் புகலிடம்கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications