சம விகிதத்தில் வாக்காளர்கள் .. புதுவை கட்சி கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை சம விகிதத்தில், மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிட பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறுத்து திராவிடப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் நந்திவர்மன், பிரதமர் வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னான்டஸ் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை சமஅளவில் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.ஆனால், இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.
தற்போது ஜாதி பெயரால் பல கட்சிகள் உருவாகி வருகின்றன. இந்தக் கட்சிகளால் நாட்டின் ஜனநாயகத்துக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் பலஇடையூறுகள் ஏற்படும்.
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னால் தேர்தல் நடக்கும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையைசமவிகிதமாக்க வேண்டும்.
இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications