"பா.ஜ.க. கூட்டணியிலிருந்து பா.ம.க விலகாது
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறது. அதிமுககூட்டணிக்கு செல்லவில்லை என்று அக்கட்சியினர் என்னிடம் உறுதியாக கூறியுள்ளனர்என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் கூறியுள்ளார்.
அகில இந்திய தலைவரான பிறகு முதல் முறையாக பங்காரு லட்சுமணன், சனிக்கிழமைசென்னைக்கு வருகை தந்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறது.இதை என்னைச் சந்தித்த அக்கட்சித் தலைவர்களே தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை என்றும், இதுபோன்று வெளி வரும்செய்திகளில் உண்மை இல்லை என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம் என்று பா.ம.க. தலைவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
வாழப்பாடி ராமமூர்த்திக்கும், பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும் இடையிலான பூசல்குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தேசிய ஜனநாயகக்கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அக்கூட்டத்தில்ராமதாஸ் கலந்து கொண்டார். ஆனால் வாழப்பாடி பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பங்கேற்காததால், வாழப்பாடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லைஎன்று கூறி விட முடியாது. எதிர்காலத்தில் நடக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கூட்டங்களில் கலந்து கொள்ள வாழப்பாடிக்கு அழைப்பு விடப்படுமா என்பதைகூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான் கூற வேண்டும் என்றார்அவர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications