வந்தனா என்றொரு "என்சைக்ளோபீடியா
கோயம்புத்தூர்:
நாடுகளின் தலைநகர்களின் பெயர் தெரியவில்லையா, அல்லது நம் நாட்டில் உள்ளநதிகளின் பெயர் தெரியவில்லையா, கர்நாடக இசையின் ராகங்களின் பெயர்தெரியவில்லையா?.
இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டுமானால், என்சைக்ளோபீடியாவைத்தேடிப் போகலாம் அல்லது வந்தனா தாரினியைத் தேடிப் போகலாம்.
என்சைக்ளோபீடியாவுக்கு இணையாக இருக்கும் வந்தனாவுக்கு வயது வெறும் 3 தான்.நாடுகளின் தலைநகர்களைக் கேட்டால் நம்மில் பலருக்கே தெரியாது. கர்நாடகசங்கீதத்தை ரசிக்கத் தெரிந்த பலருக்கும் ராகத்தின் பெயர்கள் தெரியாது.ஆனால்கோவையைச் சேர்ந்த வந்தனா, மடை திறந்த வெள்ளம் போல பதிலைக்கொட்டுகிறார்.
கேட்கும் கேள்விகளுக்கு மழலைக் குரலில் வந்தனா சொல்லும் பதில்கள் நம்மை அசரவைக்கின்றன. வந்தனாவுக்கு ஒரு வயதிலிருந்தே ஞாபக சக்தி அதிகம் என்கிறார்அப்பா ஸ்ரீனிவாசன்.
வந்தனாவுக்கு 26 கர்நாடக சங்கீத ராகங்களும் தெரியும். அந்த ராகங்களில் வந்ததிரைப்படப் பாடல்களையும் மனப்பாடமாக வைத்திருக்கிறாள். நாடுகளின்தலைநகர்கள், மாநிலங்களின் தலைநகர்கள், யூனியன் பிரதேசங்களின் பெயரும்வந்தனாவுக்கு தெரியும்.
65 நாடுகளின் கொடிகளை அடையாளம் காண்பதுடன், 50 நாடுகளை உலகவரைபடத்தில் சுட்டிக் காட்டவும் செய்வாள். மகாபாரத, ராமாயணக் கதைகளை ""பாட்டி மாதிரி விலாவாரியாக கூறத் தெரியும்.
தனது வயதுக்கே உரிய குழந்தைத்தனமும் வந்தனாவிடம் உள்ளது. நர்சரிபாடல்களையும் அழகாக பாடுவாள். 30 ஆங்கில மற்றும் தமிழ் நர்சரி பாட்ல்களையும்அழகாக சொல்வாள். ஆங்கில எழுத்துக்களையும் அவளால் சரியாக கூற முடியும்.
எந்தக் கேள்வி கேட்டாலும் சட்டென பதில் வருகிறது. லேட்டஸ்டாக, கன்னட நடிகர்ராஜ்குமார் கடத்தல் விவாகரம் குறித்தும் விரல் நுனியில் விவரம் வைத்திருக்கிறாள்.எப்போது கடத்தப்பட்டார், அதன் பிறகு என்னென்ன நடந்தது என்ற விவரங்கள்தலைகீழாக வந்தனாவுக்குத் தெரியும்.
வந்தனாவை வெறும் குழந்தையாக அவளது பெற்றோர்கள் பார்க்கவில்லை. கடவுள்அளித்த வரம் என்றுதான் நினைக்கின்றனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications