இன்சாட்-2பி கைவிடப்பட்டது
பெங்களூர்:
கடந்த இரு நாட்களில் 2 முறை பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், இன்சாட்-2பி செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு பணிகள் வேறுசெயற்கைக் கோள்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) தலைவர் கஸ்தூரிரங்கன்கூறுகையில், இன்சாட்-2பி செயற்கைக் கோளின் முக்கியப் பணிகள் வேறு செயற்கைக்கோள்களுக்கு மாற்றப்பட்டு விட்டன.
ஒளிபரப்பு, தகவல் தொடர்பு போன்ற பணிகளை இதுவரை இந்த செயற்கைக் கோள்மேற்கொண்டு வந்தது. இனிமேல் தகவல் தொடர்பு தொடர்பான பரீட்சார்த்தபணிகளுக்கு மட்டும் இன்சாட்-2பி பயன்படுத்தப்படும்.
1993-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்சாட்-2பி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்ஆயுள்காலம் 7 ஆண்டுகள். அதைக் கடந்தும் கூட சிறப்பாக அது இயங்கி வந்தது.வெள்ளிக்கிழமை பூமியுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளேஇணைப்பு மீண்டும் வந்தது. ஆனால் மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்மீண்டும் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. மறுபடியும் திங்கள்கிழமை முதல் செயற்கைக்கோளுடன் இணைப்பு கிடைத்தது.
செயற்கைக் கோளுடன் இணைப்பு கிடைத்தாலும் கூட இதை தொடர்ந்து அதன் வட்டப்பாதையில் சுற்ற வைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. எனவே இதை வழக்கமானபணிகளுக்குப் பயன்படுத்தவதற்குப் பதில் பரீட்சார்த்த பணிகளுக்கு பயன்படுத்தமுடிவு செய்துள்ளோம்.
இன்சாட்-2பி இதுவரை செய்து வந்த பணிகளை இன்சாட்-2சி, இன்சாட்-3பி ஆகியசெயற்கைக் கோள்கள் இனிமேல் கவனித்துக் கொள்ளும் என்றார் கஸ்தூரி ரங்கன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications