30 தொகுதிகளில் போட்டியிடுவோம் ..ம.ஜ.தளம்
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர்ஜி.ஏ.வடிவேலு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய நாட்டை, வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உடந்தையாகஇருக்கும் மாநில அரசைக் கண்டித்தும் சென்னை துறைமுகம் முன்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் வரும் 28 ம் தேதி மறியல் போராட்டம்நடத்தவுள்ளோம்.
இந்த மறியல் போராட்டத்திற்கு முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், தேவே கவுடா ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு,மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் 30 தொகுதிகளில் ஜனதாதளம் போட்டியிடும். நான் எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டேன். ஜாதி கட்சிகளால்நாட்டுக்குத் தீமைதான் ஏற்படும். அதனால் ஜாதி கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்.
தேர்தலுக்குப் பிறகுதான் கூட்டணி ஆட்சி பற்றி முடிவு செய்யப்படும். இருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் ஜனநாயகத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்றார்ஜி.ஏ.வடிவேலு.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications