சி.சுப்ரமணியம் உடல் தகனம்
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும், மறைந்த முன்னாள் மகாராஷ்டிரா கவர்னருமான சி.சுப்ரமணியத்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை பிற்பகல்தகனம் செய்யப்பட்டது.
சுப்ரமணியம் உடலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் உள்பட பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மின்சார எரியூட்டும் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு தமிழக தலைவர்கள்இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடலுக்கு தமிழககவர்னர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி, மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட் பல்வேறுதலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அரசின் சார்பில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு சிஎஸ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரதுஇறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டார்.
பிரதமர் வாஜ்பாய் சிஎஸ் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து இருந்து சிஎஸ் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர்பெசன்ட் நகரில் உள்ள மின்சார எரியூட்டும் மயானத்தில் அவரது, உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம்செய்யப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications