நான் பிரிவினைவாதியா? நெடுமாறன் ஆத்திரம்
சென்னை:
காங்கிரஸ் வரலாற்றை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் என்னைப்பிரிவினைவாதி என்று கூறுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
பழ.நெடுமாறன் இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
1945 ம் ஆண்டு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை,போக்குவரத்து ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். பிற அதிகாரங்கள்மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கூறப்பட்டிருந்தது.
அதற்குப்பின், 1946 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய நிர்ணய உரிமை தமிழ்நாட்டுக்கு புத்துயிர் அளிக்கும்என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. சுயநிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லைக்கோலால் அரசியல் அமைப்புவரையறுத்தல் நிகழ வேண்டும் என்று திரு.வி.க., காமராஜர், டி.டி.கிருஷ்ணன் உள்பட 12 தலைவர்கள்வலியுறுத்தினர்.
இந்த சுயநிர்ணய உரிமையையும், உணர்வையும் தான் கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் தமிழர் தேசிய இயக்கம்செய்து வருகிறது. காங்கிரஸ் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமலும், சுய நிர்ணய உரிமை பற்றி தெளிவு இல்லாமலும்எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் எங்கள் இயக்கத்தை பிரிவினைவாத சக்திகள் என்று கூறுகிறார்.
தமிழ், தமிழன் என்று சொல்வதையே தேச துரோகமாகத் சித்தரிக்கும் இவரது கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ்என்ற பெயரே வேண்டாம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் என்று பெயர் சூட்டிக் கொண்டது ஏன்?
தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த பிரகாசம், ராமமூர்த்தி, அண்ணா, கருணாநிதிபோன்றோர் இருந்த இடத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்கும் சோ.பாலகிருஷ்ணன், என்னைப்பிரிவினைவாதி என்று கூறி தனக்கு இழுக்கு தேடிக் கொண்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications