எதிர்கட்சிகளை வெளிநடப்புச் செய்ய வைத்த வீரப்பன்
சென்னை:
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்றும் வீரப்பன் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சபை கூடிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களைத் தாண்டி விட்டதால் அந்தவிவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இதற்கு சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மறுப்புத் தெரிவிக்கவே, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதையடுத்து வீரப்பன் விவகாரம் நவம்பர் 9 ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
பின்னர் வியாழக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஜீரோ நேரம் முடிந்ததும் பேசிய சபாநாயகர், மத்திய தொழில்துறை அமைச்சர்மாறனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவரைப் பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அப்பல்லோவுக்குச் சென்றார்.
அவர் இரவு முழுவதும் அப்பல்லோவிலேயே தங்கியிருந்தார். அதனால் முதல்வரால் வியாழக்கிழமை சட்டசபைக்கு வர இயலாது. இன்னும் 2 நாட்கள்முதல்வர் சட்டசபைக்கு வரமாட்டார்.
அதனால், ராஜ்குமார் விவகாரம் குறித்து நவம்பர் 12 ம் தேதிதான் விவாதிக்க முடியும் என்றார். இதையடுத்து வீரப்பன் விவகாரம்வியாழக்கிழமையும் சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications