போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கிடைக்குமா?
சென்னை:
சில நிபந்தனைகளை போலீசார் ஏற்றுக் கொண்டால் போலீஸ் சங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று தமிழக அரசின் உள்துறைச்செயலாளர் கிருபாகரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி தருமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி சோலையூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் என்பவர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் உள்துறை துணைச் செயலாளர் கிருபாகரன் தாக்கல் செய்த பதில் மனு வருமாறு:
போலீஸ் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் அல்லாத துணை கண் காணிப்பாளர்களுக்கு ஒரு சங்கமும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள்ஆகியோருக்கு ஒரு சங்கமும் அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் கருத்துக்களை கவனமாக பரிசீலித்த தேசிய போலீஸ் கமிஷன் சங்கம் அமைப்பதை மறுக்கவில்லை. 1969-ம் ஆண்டு போலீஸ்படைகளுக்கான சட்டத்தில் போலீஸ் சங்கம் அமைப்பது குறித்து சில கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் 3-வது பிரிவுபடி சங்கம் அமைக்கபோலீசாருக்கு அனுமதி தரலாம்.
1992-ம் ஆண்டு போலீஸ் சட்டத்தின்படி ஒரு போலீசாரை ஒழுங்கு மீறல் செய்ய தூண்டினால் மற்ற போலீசாருக்கு தண்டனை விதிப்பது குறித்து இச்சட்டத்தில்வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய சட்டத்தின் படி போலீஸ் சங்கம் அமைக்க அரசின் அனுமதி தேவை. 1922-ம் ஆண்டு போலீஸ் சட்டம், 1966-ம் ஆண்டு போலீஸ்படைகள் உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அளவு கோல்களுக்கு போலீசார் உட்பட்டால் சங்கம் அமைக்க அரசு அனுமதி தரதயாராக உள்ளது.
போலீசாருக்கும், அரசுக்கும் இடையே சுமுக உறவு உள்ளது. போலீசார் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லை. போலீஸ் சங்கம் பொழுது போக்கிற்குமட்டுமே செயல்பட வேண்டும். இந்த சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளிலோ,அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது.
சங்கம் அமைத்த பின்பு தங்கள் சங்க பணிகளை பத்திரிக்கைகள் மூலம் வெளியிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே போலீஸ் படை உள்ளது.போலீசாரின் குறைகளை தீர்க்க மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலகத்திலும் இத்தகைய குறை தீர்க்கும் பிரிவு உள்ளது.
போலீசார் தங்கள் குறைகளை சங்கம் மூலமாகத் தான் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சங்கம் அமைப்பது என்ற போர்வையில் போலீசார்மத்தியில் ஒரு கசப்பான சூழ்நிலை உருவாக்கப்படலாம். இது போன்ற பல்வேறு பின் விளைவுகளை பரிசீலிக்க வேண்டும். எனவே இந்த வழக்கை தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications