இன்று டாக்காவில் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் மோதல்
டாக்கா:
இந்தியாவிற்கும், வங்க தேசத்திற்கும் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமையன்றுதுவங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வங்கதேச அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை சமீபத்தில்வழங்கியது.
இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது வங்க தேசம். இந்த போட்டிவெள்ளிக்கிழமை முதல் தொடங்கி செவ்வாய் கிழமை வரை டாக்காவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் விளையாட கங்குலி தலைமையில் இந்திய அணி டாக்கா சென்றுள்ளது. இந்திய அணி வங்கதேச அணியுடன் ஒப்பிடும் போது வலுவான அணிதான்.
வங்க தேசம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியுறாமல் போட்டியை. டிரா செய்ய வேண்டும் என எண்ணுகிறதுஅந்த குறிக்கோளுடனே விளையாடவும் இருக்கிறது.
வங்க தேசத்தின் பயிற்சியாளர் இம்ரான் சர்வார் கூறியதாவது:
உலக கிரிக்கெட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணியில் இந்தியாவும் ஒன்று. அவர்களைவெல்வது கடினம். அதனால் இந்த ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்துடன் விளையாட இருக்கிறோம்.
இதற்காகவே 7 பேட்ஸ்மேனை இந்த ஆட்டத்தில் சேர்த்துள்ளோம். இவர்கள் நீண்ட நேரம் களத்தில் விளையாடவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த விதமான கஷ்டமும்இல்லை என கூறினார்.
இதனிடையே பார்வையற்றோர் விளையாடும் கிரிக்கெட் போட்டி 12-ம் தேதி டெஸ்ட் போட்டியின் மதிய உணவுஇடைவேளையின் போது நடைபெறும். இதில் ஒரு அணிக்கு 7 பேர் விளையாடுவார்கள்.
பெண்கள் கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட உள்ளது. போட்டியின் இடையில் கங்குலியும், வங்கதேசஅணித்தலைவர் நைமூர் ரஹ்மானும் இணைந்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்பணியை துவக்கி வைப்பார்கள்.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்க தேசம் விளாையாடுவதையொட்டி தபால் தலையை வெளியிடவும் முடிவுசெய்திருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications