மகாகும்ப மேளா: சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டம்

Subscribe to Oneindia Tamil

கோர்காபூர்:

ஜனவரி மாதம் அலகாபாத்தில் நடக்கவுள்ள மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக சுமார் 270 க்கும் மேற்பட்ட சிறப்புரயில்களை இயக்க வடகிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறத்து வடகிழக்கு ரயில்வே பொதுமேலாளர் கார்க் வெளியிட்ட அறிக்கை:

ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசம் தலைநகர் அலகாபாத்தில் மகா கும்ப மேளா நடக்கவிருக்கிறது. இதைக் காண நாடு முழுவதிலிருந்து ஏராளமானபக்தர்கள் வருகை தருவார்கள்.

இவர்களின் போக்குவரத்து வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வடகிழக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. கும்ப மேளா நடக்கும் ஜனவரி மாதத்தில்அலகாபாத் மற்றும் டார்கஞ்சி பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்தல், பிளாட்பாரங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை சரியாக கவனித்துக் கொள்ளும்படிரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையத்தில் உள்ள தங்கும் அறைகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கும்பமேளாவைக் காண வரும் பக்தர்கள் அனைவரும் ரயில்வே இலாகாவினரை அணுகி அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

சுமார் 20 ரயில் நிலையங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்காக வடகிழக்கு ரயில்வே ரூ 13.5 கோடி செலவிட்டுள்ளது என்று தனதுஅறிக்கையில் கூறியுள்ளார் கார்க்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+